search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 259824"

    • அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.

    காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி டி.என்.ஹெச்.பி. காலனியை சேர்ந்தவர் ஜெய்சிங் (வயது 73). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பிளம்பிங் பிட்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஜெய்சிங் தனது மனைவியுடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலையில் ஜெய்சிங்கின் வீட்டின் முன்பக்க கேட் திறந்து கிடந்ததால் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெய்சிங் இல்லை. இருப்பினும் முன்பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது. வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஜெய்சிங்கிற்கு தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றதும், பீரோவில் பணம் மற்றும் மதிப்பான பொருட்கள் ஏதும் இல்லாததால் காரை திருடி சென்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தென்காசி போலீசார் காரை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    • கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.
    • அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி, சூளையைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(60). வாடகை கார் வைத்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.

    அங்கு அவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் பேசி நெருக்கமானது. பின்னர் ஊட்டி சுற்றுலா செல்லலாம் என வாடகை பேசி காரில் புறப்பட்டனர்.இந்நிலையில், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி டிபன் வாங்க சிவலிங்கம் இறங்கிச் சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு தப்பியது. அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது காருடன் நான்கு பேர் கொம்பன் சுற்றி தெரிவது போலீசருக்கு தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே நடந்த சோதனையின் போது கார்த்திக்கு எது காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் சுத்தியடைத்து கைது செய்தனர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெருமாநல்லுாரைச் சேர்ந்த நந்தகுமார்,(20)ஜெயராம் (22), குன்னத்துாரைச் சேர்ந்த சபரீஸ்(28), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
    • முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    கேளம்பாக்கம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டதாக கூறி ராஜ லிங்கத்தை தாக்கி காரின் சாவியை பறித்தனர். மேலும் கார் சாவியை போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த ராஜலிங்கம் அங்கிருந்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் வந்த தம்பதியினர் காரை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலிங்கம் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.

    முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது வலது கைமுறிந்தது. சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். திருடிய காரை அவர்கள் குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.
    • கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் ரேமன்ஸ் ராய் (வயது 45). இவர் கடந்த மாதம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் இவரது மாமனார் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை பார்த்த போது கார் காணவில்லை.கார் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பல்லடம்- தாராபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கடந்த மாதம் லட்சுமி மில் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல்(வயது 23), ஏகாம்பரம் மகன் பாரத் (22) என்பதும் இருவரும் சேர்ந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கார்,2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கன்சல்டிங் நிறுவனத்தில் நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை.
    • இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளமுத்து கவுண்டன்வலசை சேர்ந்த வர் கோபுராஜ் (வயது 30).

    இவர் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள பெருந்துறை ரோட்டில் தனது நண்பர் குமரவேல் என்பவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்கும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கோபு ராஜ் வழக்கம்போல் தனது கன்சல்டிங் நிறு வனத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்த 7 கார்களை கம்பி வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து அவர் காலை நிறுவனத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • அனில் சவுகான் மீது 180 வழக்குகள் உள்ளன, இதற்கு முன்பும் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
    • கொள்ளையடித்த கார்களை விற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்

    புதுடெல்லி:

    கடந்த 27 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய அனில் சவுகான் என்பவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில், அனில் சவுகானை டெல்லி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். தேஷ் பந்து குப்தா சாலைப் பகுதியில் இருந்து அவரைப் பிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில், கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை அனில் சவுகான் திருடியது தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில், குறிப்பாக, மாருதி 800 கார்களை மட்டுமே குறிவைத்து அனில் சவுகான் திருடி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும், கொள்ளை சம்பவத்தின்போது, சில கார் டிரைவர்களை, அனில் சவுகான் கொலை செய்துள்ளதாகவும், தற்போது ஆயுத கடத்தலில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த கார்களை விற்று, டெல்லி, மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்து, அனில் சவுகான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 52 வயதாகும் அனில் சவுகான் மீது மீது 180 வழக்குகள் உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். ஒருமுறை 5 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார்.

    அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 பிள்ளைகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் அரசு ஒப்பந்ததாரராக இருந்த அவர், அங்குள்ள உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர்.

    • நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது
    • அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 62). இவர் பேருந்து பணிமனை அருகே கார் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே நின்ற வெள்ளை நிற அம்பாசிடர் கார் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×