என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கியாஸ்"
- 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம் அய்யம்பாளையம் கோல்டன் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் ( வயது 52). சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து சுரேஷ், பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது.
அவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (42), மற்றும் திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்த முரளி (வயது 27) , நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கைதான மணிமாறன் பொங்குபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணித்துள்ளார். திருடுவதற்கு ஏற்றவாறு எந்த வீடுகள் பூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணிமாறனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.
குனியமுத்தூர்:
கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.
இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.
அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.
இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
- கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.
சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு காற்றில் நான்கு கிலோமீட்டர் வரை பரவியது.
- விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற ஓடினர். இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர்.
கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு காற்றில் நான்கு கிலோமீட்டர் வரை பரவியது. அதை சுவாசித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கியாஸ் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.
இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.
அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.
- சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
- டிபன் கடைக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் சாலையோர டிபன்கடை நடத்தி வருபவர் ஜாண். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் டிபன் விற்பனை செய்துவந்தார். இரவு 10 மணிவரை தினமும் கடை திறந்து இருக்கும். இதன் எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை டிபன் கடை நடத்தி கொண்டு இருக்கும்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் கடைமுழுவதும் தீயில் கருகியது. அங்கு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். அந்த பகுதி பொதுமக்களும், ரோட்டில் நடந்து சென்றவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். டிபன் கடையின் மேற்கூரை இரும்பு தகடுகளால் மாட்டப்பட்டு இருந்தது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்