search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசோதனை முகாம்"

    • பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
    • காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக் கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு அதி கரித்து வருவதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஒரு குடும்பத்தில் ஒருவ ருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் காய்ச்சல் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டுமின்றி சளி தொல்லை யாலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பர வலை தடுக்க ஏற்கனவே மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. மாவட்டத் தில் உள்ள 9 ஒன்றியங்களில் தலா 3 இடங்களிலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட குன்னு விளை, குளத்தூர், நீராளி குளம், ஏ.ஆர்.கேம்ப் பகுதி யில் உள்ள நகர்ப்புற நல் வாழ்வு மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் நடைபெற்ற பகுதி களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் காய்ச்சல் அறிகு றியுடன் வந்தவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுயமருந்து உட்கொள்ளக்கூடாது. டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    சளி மற்றும் காய்ச்சல் தொல்லையால் குழந்தை கள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே சராசரி யாக தினமும் 35 பேர் பாதிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 45 ஆக அதிக ரித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

    குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சுய மருந்து உட்கொள்ளக் கூடாது. காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் உடனடியாக பக்கத் தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகள் அல்லது தனியார் ஆஸ்பத்திரி களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்தது
    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட் டார் வாகன ஆய்வாளர் வெங்கட ராகவன் முன் னிலை வகித்தார்.

    சென்னை தனியார் மருத் துவமனை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 100 டிரைவர், கண் டக்டர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    அதன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினர்.

    • இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இந்த முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பார்வை மற்றும் இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செல்வமணி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சக்திவேல் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காட்பாடியில் இன்று நடந்தது
    • உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 20-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடக்

    கிறது. முகாமில் கண்பார்வை குறைபாடு, கண்புரை ஆகியவற் றுக்கு பரிசோதனை செய்யப்படும். கண்புரை நோயாளிகள் முகாம் நடைபெறும் அன்றே சென்னை பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படு வார்கள். அவர்களுக்கு விழிலென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவச மாக வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கே.கோவிந்த ராஜுநாயுடு, ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, கே.ஆர்.விஜயன், சி.குமரவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    • 205 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
    • இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்

    பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர் சோமு ஜூவல்லரி அதிபர் சோமசுந்தரம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு 205 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 45 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 10 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    மேலும் பாண்டிச்சேரி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது.

    • வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.
    • விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    ஒவ்வொரு பயிரின் மகசூலையும், ஒவ்வொரு பருவத்திலும் நிர்ணயிக்கும் நோக்கில் எதேச்சை முறையில் தேர்வு செய்யப்படும் வயல்களில், வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் புள்ளியில் துறை வாயிலாக பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் உமையாள்புரம் கிராமத்தில், விவசாயி இந்திராணி என்பவரது மக்காச்சோள வயலில், பயிர் அறுவடை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த பரிசோதனை முகாமில், புள்ளியியல் துறை மண்டல துணை இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி இயக்குநர் பெரியசாமி, ஆய்வாளர் குணசீலன், வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், வேளாண்மை அலுவலர் தாமரைச் செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் முத்துவேல், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நல்லவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், ஏத்தாப்பூரில் முகாமிட்டு ஊரக திறன் பயிற்சி பெற்று வரும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை மாணவர்கள் மற்றும் திருச்சி புனித ஜோசப் கல்லூரி புள்ளியியல் துறை மாணவர்களும் இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு களப்பயிற்சி பெற்றனர்.

    • பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஜெரினாகாடு பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். இரவு நேரங்களில் மட்டுமே இந்நோய்க்கான தாக்கம் ரத்தத்தில் தெரியும் என்பதால், இரவு நேரத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

    ஜெரினாகாடு பகுதியில் உள்ள அனைத்து கிரா மங்களுக்கும் சென்று சுகாதாரத்துறையினர் பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் அந்தந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் இம்முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு இலவச இருதய மருத்துவ முகாம் நடந்தது.
    • 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி ரோட்டரி சங்கம், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார துறை இணைந்து குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாமை முத்துப்பட்டினம் வித்யா கிரி மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்து முன்னிலை வகித்தார். கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் சத்குரு தேவன் வரவேற்றார். 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதிக்க பதிவு செய்திருந்தனர்.

    இதில் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் லியாகத் அலி, அப்பல்லோ மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவர் முத்துக்குமரன், வித்யாகிரி பள்ளி தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை வாசன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அருணின் 54-வது பிறந்த நாளை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை மற்றும் மதுரை குறிஞ்சி மலர் அரிமா சங்கம், வரதன் கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செல்லூர் மனோகரா நடுநிலை பள்ளியில் நடந்தது.

    முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை வாசன் கண் மருத்துவமனை முதன்மை மேலாளர் பன்னீர் செல்வம், மக்கள் தொடர்பு அதிகாரி பிச்சைக்கனி மற்றும் ஊழியர்கள், குறிஞ்சி மலர் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    ×