search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

    மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். எனவே வெற்றியை பதிவு செய்ய இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    அதே வேளையில் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதுடன் நடப்பு தொடரையும் மோசமாக இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • கேஎல் ராகுலுக்கு பதில் சுப்மன் கில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
    • மிட்செல் ஸ்டார்க், ஆல்-டவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தூர்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை தொடங்குகிறது. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் விராட்கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ரன் குவிக்காததால் நெருக்கடியில் உள்ளார்.



     அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதே வேளையில் அவருக்கு பதில் சுப்மன் கில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல், பேட்டிங் கில் அசத்தி வருகிறார். ரோகித் சர்மா 183 ரன்னுட னும், அக்சர் பட்டேல் 158 ரன்னுடனும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இத்தொடரில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வின் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறுகிறார்கள். கடந்த 2 டெஸ்டில் ஜடேஜா 17 விக்கெட்டும், அஸ்வின் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3-து டெஸ்டிலும் ஜடேஜா, அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி கடந்த 2 டெஸ்டில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடினர். இதனால் வெற்றி கட்டாயத்தில் களம் இறங்குகிறது. மேலும் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும்.

    அந்த அணி கேப்டன் கம்மின்ஸ், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த நாட்டுக்கு சென்று உள்ளார். இதனால் 3-வது டெஸ்டில் இருந்து அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார்.

    அதேபோல் காயம் அடைந்த தொடக்க வீரர் டேவிட் வார்னரும் விலகி உள்ளார். அவர்களின் விலகல் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் ஏற்றுள்ளனர். அந்த அணி பேட்டிங்கில் கவாஜா லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ரென்ஷா உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன், டாட் மர்பி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-டவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள். மேலும் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்தூர் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆய்வு செய்தார்.

    • இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
    • ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங் வரிசையில் ஒவ்வொருவரும் ரன்கள் குவிக்க வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேஞ்ச் ஆகிய வீரர்களை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவில் அதிக ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும். இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடையாமல் இருந்தாலே அது ஆஸ்திரேலியா செய்யும் சாதனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    என்று மெக்ராத் கூறியுள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார்.
    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன் ஆஷ்டன் அகர் இந்தியா திரும்ப உள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மார்ச் 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி முடிவடைகிறது. கடைசி டெஸ்ட் மார்ச் 9-ம் தேதி தொடங்கி 13-ல் முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆஷ்டன் அகர் சொந்தநாடு திரும்பியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆஷ்டன் அகார் இந்தியா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா திரும்ப உள்ளனர்.

    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி முடிவடைகிறது. கடைசி டெஸ்ட் மார்ச் 9-ந் தேதி தொடங்கி 13-ல் முடிவடைகிறது.

    அதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.

    ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

    • டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

    2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள்.

    இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    • சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார்.
    • ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியையும், அறிவுரையையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

    பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்களுக்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தையும் ஏறத்தாழ இந்தியா உறுதி செய்துள்ளது. முதல் 2 போட்டிகளும் முதல் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார். எப்போது என்னிடம் இதுபற்றி கேட்டாலும் சம்மதம் என்றுதான் கூறியுள்ளேன்.

    சிறந்த அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய வீரர்களுக்குபயிற்சியையும், அறிவுரையையும் வழங்க நான் தயார். மேலும் இந்திய ஆடுகளங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் நான் அவர்களுக்கு பயிற்சி தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது டெஸ்ட்டில் விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று குரல் எழுப்பினர்.
    • விராட் கோலியின் செயலை பல்வேறு நபர்களும் பாராட்டி வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் டெல்லி டெஸ்டின் போது இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த நேரத்தில், விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று குரல் எழுப்பினர். அவர்களை நோக்கி அதட்டிய விராட் கோலி தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் ரசிகர்கள், 'இந்தியா இந்தியா' என்று குரல் எழுப்பினர்.

    இதுதொடர்பான சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் செயலை பல்வேறு நபர்களும் பாராட்டி வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. 

    • இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
    • ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது. இருவரும் இணைந்து (ஜடேஜா 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்) 10 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தனர்.

    115 ரன் இலக்கை இந்திய அணி 4 விக்கெட் இழந்து எடுத்தது. இந்தியா 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்டில் 4-வது வெற்றியை பெற்றது. அவரது கேப்டன் பொறுப்பில் இந்தியா விளையாடிய முதல் 4 டெஸ்டிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. தோல்வியை தழுவவில்லை.

    இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார். டோனி தலைமையில் முதல் 4 டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்தது. டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    • மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார்.
    • ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோற்று பரிதாப நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

    மார்ச் 1-ந்தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார். ஒருவேளை அவர் வரவில்லையென்றால் ஸ்டீவ்சுமித் கேப்டனாக பணியாற்றுவார்.

    • இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.
    • ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து ஐசிசி புதிய புள்ளிப்பட்டியலை வெளியிட்டது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களில் ஆட்டமிழந்தது.

    115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

    இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதில் ஆஸ்திரேலிய அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன.

    எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×