என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குப்பை கழிவுகள்"
- மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள்.
- நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இதில் 31 வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள 20 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்க முடியாத சூழ்நிலையில் 51 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தினம்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேக ரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நத்தப்பேட்டை கிடங்கில் கொட்டி அதனை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள். தற்போது மக்கள்தொகை பெருக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவு காரணமாக குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாநகராட்சி ஊழியர்கள் பலர் குப்பைகளை நத்தப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் கொட்டி வருகிறார்கள்.
மேலும் வீடுகளில் இருந்து கழிவு நீர் அனைத்துமே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகின்றன. வழக்கமாக மழைக்காலங்களில் நத்தப்பேட்டை ஏரி, கொலவாய் ஏரி, ரெட்டேரி முழுமையாக நிரம்பினால் உபரி நீர் அருகில் உள்ள வையாவூர், கலியனூர், நெல்வாய் முத்தியால்பேட்டையில் உள்ள சிற்றேரி, தென்னேரிக்கு செல்லும். குப்பை கழிவுகளால் நத்தப்பேட்டை ஏரி மாசு அடைந்து வருவதால் அதன் அருகே உள்ள வையாவூர் ஏரியும் தற்போது மாசு அடைந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் கழிவு நீர் அங்கிருந்து நத்தப்பேட்டை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றடையும். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து நத்தப்பேட்டை ஏரியில் தண்ணீர் கலப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கால்வாயில் வரும் கழிவு நீர் அனைத்தும் அப்படியே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகிறது. இதனால் நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் வையாவூர் ஏரிக்கும் செல்வதால் அந்த ஏரி தண்ணீரின் நிலையும் மோசமடைந்து உள்ளது.
நத்தப்பேட்டை ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய நீர் பச்சை மற்றும் கருப்பு நிறமாக மாறி வருவதால் அந்த தணணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாநகராட்சி குப்பை கிடங்கில் உரிய பராமரிப்பு செய்யவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் ரூ.93 லட்சம் அபராதம் விதித்தனர். ஆனால் இதுவரை அதனை செலுத்த முடியாமல் மாநகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் அபராதம் விதித்தும் தற்போது வரை ஏரியை அசுத்தம் செய்யும் பணியிலேயே மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஏரிநீர் மாசடைந்து வருவதால் பறவையின் வரத்தும் குறைந்து உள்ளது. இந்த ஏரியை ஒரு சுற்றுலாத்தலமாகவோ, படகு சவாரி தலமாகவோ மாற்றினால் பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.
மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, மஞ்சள் நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நத்தப்பேட்டை மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.60 கோடிநிதி ஒதுக்கப்பட்டு
உள்ளது. இதற்கான பணி விரைவில் நடைபெறும் என்றனர்.
- தூய்மை பணியாளர்கள் வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த சில ஆண்டுகளாக புலவர்பள்ளி பகுதியில் கொட்டி அங்கு பிரித்து வந்தனர்.
குப்பைகளை பிரித்து எருவாக்கும் வகையில் பயோ மெட்ரிக் செய்யாமல் அங்கு குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும்,பல்வேறு மர்ம நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 10 நாட்களாக குப்பைகள் அங்கு கொட்டகூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்க கடந்த 15 நாட்களாக வரவில்லை என்றும் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள் எடுத்து செல்ல தூய்மை பணியாளர்கள் வராமல் தெருக்கள்,சாலைகள்,கழிவு நீர் கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் பரவி குப்பைகள் தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி பிரிப்பதற்கு புலவர்பள்ளி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்து அங்கு குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்க குப்பைகிடங்கு கட்டுவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு இதுவரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள கோமுட்டேரி என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் இடம் தேர்வு செய்து அங்கும் குப்பைகள் பிரித்து உரம் தயார் செய்வதற்கு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அங்கும் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். வீடுகளில் சேறும் குப்பைகளை தினதோறும் தூய்மை பணியாளர்கள் சேகரித்து சென்று வருகிறார்கள்.
மொத்தம் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வார்டுக்கு 52 தொழிலாளர்கள் என்ற அளவில் அவர்கள் தூய்மைபணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தூய்மைபணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது வார்டுக்கு 20 பணியாளர்கள் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஒரு தெருவுக்கு குப்பைகள் சேகரிக்க செல்லும் தொழிலாளர்களால் அப்பகுதியில் முழுமையாக பணியை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் மதியம் வரை குப்பை சேகரிக்கும் பணி நடந்தும் முழுவதும் முடிக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கி விடுகிறது.இதற்கு முன்பு காலை 10 மணிக்குள் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு முடிந்து வந்தது. இதற்கிடையே குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரமுடியாததால் பெரும்பாலானோர் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தெருக்கள், மற்றும் வீட்டு முன்பு வீசிவிடுகின்றனர். அதையும் அகற்ற நாள்கணக்கில் ஆவதால் திருவொற்றியூர் பகுதி முழுவதுமே குப்பை நகரமாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் குப்பைகளால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளான விம்கோ நகர் சக்திபுரம், எல்லையம்மன் கோவில், காலடிபேட்டை, மாடர்ன்லைன், மேற்கு மாடவீதி, வடிவுடையம்மன் கோவில் பின்புறம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் பல இடங்களில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அவை நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் குப்பை அதிகம் சேரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மறுநாள் குப்பை சேகரிப்பு பணி கடும் சவாலாக மாறி வருகிறது. மேலும் வாகனங்களில் வந்தும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அப்போது குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வார்டு தூய்மையாக இருந்தது.
ஆனால் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் 24 பேர் மட்டுமே ஒரு வார்டில் வேலை செய்கின்றனர். வார்டில் வேலை செய்யும் ஒரு தூய்மை பணியாளர் 7, 8 தெருக்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அவர் பகல் 12 மணி வரையும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல வார்டுகளில் குப்பையை தரம் பிரிக்க இடம் இல்லை. எனவே அந்தந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை கட்டி போட்டு விட்டு பின்னர் மொத்தமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். நீண்ட நேரம் குப்பை தெருக்களில் தேங்கி கிடப்பதால் அவற்றை கால்நடைகள், நாய்கள் சாலைகளில் இழுத்து போட்டு விடுகிறது. குப்பைகள் அதிகம் சேர்ந்தால் அதை மூட்டை கட்டி அருகில் உள்ள பள்ளம் மற்றும் முட் புதர்களில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது. எனவே இது குறித்து மேலும் 350 தூய்மை பணியாளர்கள் வேண்டுமென்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளோம். உடனடியாக கூடுதல் ஆட்களை ஒதுக்கி திருவொற்றியூர் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் நாங்கள் அதில் தலையிடுவதில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது.
- இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி 21-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.
எனவே லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடிபாடு பொருட்கள் அகற்றப்படவில்லை.
மேலும் ஒருசிலர் அங்கு குப்பை மூட்டைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மலை போல தேங்கி கிடக்கிறது.
எனவே லோயர்பஜார் பகுதியில் இடிபாட்டு பொருட்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது
- போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் 3 டெம்போவில் குப்பை கழிவுகள் ஏற்றி கொண்டு வந்து வெள்ளிகோடு பகுதியில் கொட்ட முயற்சித்தனர். அபபகுதி மக்கள் ஒன்றிணைந்து டெம்போவை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 டெம்போவை பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது.
- குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம் கரசங்கால், படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி, வைப்பூர், வட்டம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. 6 வழி சாலை ஒரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சாலை ஒரங்களில் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளினால் மர்ம காய்ச்சல் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வண்டலூர்- வாலாஜாபாத் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
- ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இதே ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனங்களை ஓட்டி அவதி அடைந்து விபத்து ஏற்படும் வகையில் செல்கின்றனர்.
இதனால் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதிப்படைகின்றனர். இதனால் மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே குப்பைக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.
- இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.
இது மட்டுமின்றி வாரச்சந்தை, நம்பியூர் சாலை, சத்தி மெயின் ரோடு, பவானிசாகர் சாலை, திருப்பூர் ரோடு போன்ற பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுகளும் ஆங்காங்கே கொட்டி கிடைக்கின்றன.
இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தெருவில் இருக்கும் குப்பைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் போட்டு தீ வைத்து விடுகின்றன.
எனவே குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் கடந்த 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட ப்பட்டது. முன்னதாக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகன ங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் குப்பை கழிவுகளை நேரடியாக பெற மாநகராட்சி சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் சிலர் விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணிக்காய், மா இழை போன்றவற்றை அப்படியே சாலையோ ரங்களில் வீசி சென்றுள்ளனர்.
இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இது தொடர்ந்து இன்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு மண்டங்களிலும் குவிக்க ப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்