search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 290490"

    • பிரதமர் மோடிக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கடிதம்
    • திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-

    ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் 3 விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. (ரெயில் எண்: 12603/12604, 12759/12760 மற்றும் 17651/17652) பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்களின் வசதிக்காக இதில் ஏதாவது ஒரு விரைவு ரெயி லினை திருச்சிராப் பள்ளி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் தீவிர நடவ டிக்கை யின் பயனாக மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரெயில் பாதை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஐதராபாத் முதல் சென்னை வரும் 3 விரைவு ரெயில்களில் ஏதாவது ஒன்றினை கன்னியாகுமரி வரை நீட்டிப்ப தில் தொழில் நுட்ப ரீதியில் எந்தவித தடையும் இல்லை.

    இந்த ரெயிலினை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பதால் 15 தென் மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் அங்கிருந்து கன்னியாகுமரி வந்து புனித நீராடிவிட்டு தங்கள் பகுதிகளுக்கு செல்வார்கள். குறிப்பாக ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள்.

    இந்த ரெயில் இயக்கப்படுவதன் மூலம் தென்மாவட்ட மக்களும் ஐதராபாத் மற்றும் ஆந்திரா மாநிலத்துக்கு செல்கின்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    கன்னியாகுமரி யிலிருந்து சென் னைக்கு குறை வான ரெயில்களே இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் இந்த ரெயில் இயக்கப்படு வதன் மூலம் பயணி களின் இட நெருக்க டியை தவிர்க்க முடியும். ஐதராபாத் - சென்னை விரைவு ரெயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும் போது 50 சதவீத டிக்கட்டுகள் சென் னைக்கும், 50 சதவீத டிக்கட்டுகள் தென் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ரெயில் இயக்கப்பட்டால் கன்னியா குமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய இடங்க ளுக்கு சென்று பணிபார்க்கும் பணியாளர்கள், கல்வி பயில செல்லும் மாணவர்கள் பெரிதும் பயன டைவார்கள். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ரெயில் பயணிகள் பயனடை வார்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லை என்ற ரெயில் பயணிகளின் புகாரை நிவர்த்தி செய்யும் வகையில் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் வாரத்திற்கு 3 முறை இந்த ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    • திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
    • நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.

    புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதியவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    வளர்ந்து வரும் நகரமான திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு ெரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பல ஊர்கள் சுற்றி பல மணி நேர பயணத்திற்கு பின்பு சென்னை செல்கிறது.இதனால் கூடுதலாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக புதியதாக விரைவு ரெயில் ஒன்று இயக்க வேண்டும்.அதுவும் நேர்வழியில் இயக்க வேண்டும் குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று குறிப்பிட்ட நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்படி புதிய ரெயில் இயக்கும்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 2 தொகுதியில்உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் தொழில் செய்வதால் கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வர வசதியாக இருக்கும். அதனால் புதிய ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கனிமொழி எம்.பி. இதுசம்பந்தமாக அதிகாரியுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

    • பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.
    • சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    பாபநாசம்:

    அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் வண்டி
    (வண்டி எண்: 09419/09420 வருகின்ற ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில்
    நின்று செல்லும்.

    இந்த ெரயில் வருகின்ற 25.12.22, 1.1.23, 8.1.23, 15.1.23, 22.1.23, 29.1.23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை

    7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 23.12.22, 30.12.22, 6.1.23, 13.1.23, 20.1.23, 27.1.23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும்.

    இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    ×