என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பனிபொழிவு"
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
- பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.
திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் சுற்றுவட்டாரா பகுதிகள், திருப்பதி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளை போர்வை போற்றியது போல் பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், மூடு பனி காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர்.
இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.
குறிப்பாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனி குறையாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.
- குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
- ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.
மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
- வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் ஆனால், தற்போது அதற்கு மாறாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
குறிப்பாக இன்று அதிகாலை முதல் கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சற்று கூடுதல் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படும் சூழலால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் டியூசன் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் அச்சமடைந்துள்ளனர்.
நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.
- திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது.
- மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து மாசி மாதத்திற்குள் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் பங்குனி மாதம் நிறைவு பெற்ற நிலையிலும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் கடுமையாக இருக்கிறது
திருவாரூரில் நேற்று அதிகாலை வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வயல் வெளிகளில் புகைமூட்டம் போல் காட்சி அளித்தது. திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்தன.
மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்திலும் சென்றதையும் காண முடிந்தது.
பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள சுவெட்டர், குல்லா, மப்ளர் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் நேற்று சிரமப்பட்டனர்.
இதேபோல் நேற்று காலை மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.
இதே போல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று காலை கடும் குளிருடன் பனிப்பொழிவு ஏற்பட்டது.
- சீர்காழியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- விபத்தை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது.
இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
புகையான் நோய் தாக்கம் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- வாகன ஓட்டிகள் அவதி
- முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஏலகிரி மலை ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் தற்போது வரை யிலும் கருமேகத்துடனும் கடுமையான பனிப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.
இன்று காலை விடிந்தும் வெகு நேரமாகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
கடும் பனிப்பொழிவில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்