search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைச்சாலை"

    • ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதியுள்ளனர்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவனும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது.

    சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன.
    • சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196 குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கொல்கத்தா ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    'இதுகுறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி' கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


    சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உ.பி., சிறைகளில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
    • கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல.

    அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22, 2024 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை நாடு முழுவதும் உள்ள சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

    கும்பாபிஷேகம் விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்தார்.

    இதுகுறித்து உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், "தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். புனிதமான அந்நேரத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது" என்றார்.

    • வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தெத்தூர் கிராமத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
    • கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலா ளர் யூனியன் மாநில பொதுச் செய லாளர் தெத்தூர் கரடி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தெத்தூர், மேட்டுப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகள் 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகு தியில் 1971-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு சிறுமலை வனப் பகுதியை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து 840 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நிலங்கள் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறுதானிய உற் பத்தி, பலன் தரும் பழ மரங்கள் நட்டும் மற்றும் மானாவாரி பயிரிட்டும் விவசாயம் செய்து வருகின்ற னர். இவர்களின் வாழ்வா தாரம் இந்நிலங்களை சார்ந்துள்ளது. இதில் சிலர் 2006-ல் பட்டா பெற்றுள் ளனர். பலர் பட்டா பெறா மல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பட்டாபிராமில் புதிதாக மதுரை மத்திய சிறைச் சாலை கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. சிறைச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தை தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் கையகப் படுத்திருப்பது பொது மக்களிடம், விவசாயி களிடமும் பெரும் எதிர்ப் பையும், அதிருப்திையையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சிறை அமைய உள்ள இடம் சிறுமலையின் தென் பகுதியான அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு காட்டு எருமை, மாடுகள், புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டு பன்றிகள், முள்ளம் பன்றிகள், தேவாங்கு உள்ளிட்ட அனைத்து வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    விவசாயிகள் மற்றும் வன விலங்குகளின் நலனை கொண்டு தெத்தூரில் சிறைச்சாலை கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் பட்டா இல்லாத விவசாயி களுக்கு பட்டா வழங்கி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது என மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தீர்மானத்தில் கூறியுள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கி னார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன் னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையாசுழியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.என்.நாக ராஜன், தென்மண்டல தலைவர் குஷின் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையா புரி, சோழவந்தான் நகர துணைச் செயலாளர் சாமி நாதன், அலங்கை ஒன்றிய துணை செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், தொழி லாளர் அணி நகர செயலா ளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, 28-ந்தேதி கும்பகோ ணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்புவிழா, 29-ந்தேதி மாரியப்ப வாண் டையார் நூற்றாண்டு விழா, 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்க ளுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயி களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

    சாத்தை யாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை தொடங்குவதை யொட்டி மழைநீரை சேக ரிக்க ஏரி, கண்மாய், குளங்க ளில் சீமைக்கருவேல முட் களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பு மணிவண்ணன் நன்றி கூறி னார்.

    • மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
    • சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை கூடல் புதூர், ரயிலார் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மத்திய ஜெயிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், "நான் மதுரை மத்திய ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்புகிறேன். எனக்கு 92 வயது ஆகிறது. எனவே புத்தகங்களுடன் நேரடியாக ஜெயிலுக்கு வர இயலவில்லை. ஜெயில் அதிகாரிகள் நேரில் வந்து புத்தகத்தை வாங்கி சென்றால், பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.

    முதியவரின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவரிடம் "உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

    சிறைச்சாலைகளில் கைதிகள் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.

    மதுரையைச் சேர்ந்த 92 வயதான பெரியவர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது சேகரிப்பில் இருந்து 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கி உள்ளார்.

    வாழ்நாள் எல்லாம் சேகரித்து வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு பகுதியை, சிறை கைதிகளின் நலனுக்காக வழங்கிய அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்த செய்தியை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.

    நான் மிசா காலத்தில் அரசியல் கைதியாக ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு அங்கு உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்றைத் தாண்டி நிறைய நாவல்களை படித்து அறிந்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்வரின் பாராட்டு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மத்திய சிறைக்கு 300 புத்தகங்கள் வழங்கியதை கேள்விப்பட்டு, தமிழக முதல்வர் என் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் பெருமை தருகிறது. இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்கு நன்றி சொல்லவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.

    • வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
    • 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.

    நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.

    வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.

    வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.

    இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.

    அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.

    னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×