search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாருக்கு தகவல்"

    • 1¼ கிலோ கைப்பற்றினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரத்தில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் வசித்துவரும் ஆரோக்கியம் என்பவர் மகன் கிளிண்டன் என்கிற வினோத்குமார் (வயது 24). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கு வைத்திருப்பதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்.

    வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கிளிண்டனை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்கு ப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி குணவதி (வயது 52) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணவதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த குணவதியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குணவதி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் தூக்கில் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). இவர் செய்யாறு பகுதியில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி அமுதா(46). இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்காக செய்யாறுக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    காலையில் அமுதா எழுந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் உமராபாத் பஸ் நிலையத்தில் நவ நீத கிருஷ்ணன் (வயது 30) என்பவர் பங்க்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் குட்கா பாக்கெட் கடை பறிமுதல் செய்தனர்.

    மேலும் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்
    • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

    செய்யாறு:

    செய்யாற்று பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை நடப்பதாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பாலத்தின் கீழ் நின்றிருந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். வாலிபர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செய்யாறு பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 22), பிரவீன் (20), என்பதும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த எக்னேஷ் (20). என்பதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகர போலீசாரால் இன்று காணாமல் போன 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    இது தவிர பீளமேடு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு இன்னோவா கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்க கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

    போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை போலீசார் உடனடியாக போலீஸ் துறையினருக்கு அனுப்பு வதற்கு இந்த மெ ன்பொருள் பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது உடனடியாக இந்த மென்பொருள் மூலம் அனுப்பலாம். உளவுத்துறை போலீசாரின் வேலைப்பளு வை குறைப்ப தற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆட்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் மென்பொருளில் சோதனை செய்யப்படும் போது, குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க மிகவும் வசதியாக உள்ளது.

    எப்போதும் வேண்டு மானாலும் இதிலிருந்து தகவல்களை போலீசார் வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொள்ளலாம். போலீஸ் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்து ம் டிஜிட்டலைஸ் பண்ண ப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் இந்த மென்பொருள் பயன்படுத்த ப்படுகிறது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் உடன் இருந்தார்.

    ×