search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல்"

    • ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
    • கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.

    ஆனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

     

    அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை முதலைகள் இழுத்துச்சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. வெள்ளை நீர் வடிய வடிய இங்கு புகுந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷூட்டரில் பின்புறம் அமர்ந்துள்ள நபர் முதலையைக் கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் பிரதான சாலையில் வண்டியை ஓட்டிச்  செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும்.
    • இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது

    சீசனில் மட்டுமே கிடைப்பதால் வாட்டத்தில் இருக்கும் மாம்பழப் பிரியர்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ்கள் ஆறுதலாக இருந்து வருகிறது. ஒரிஜினல் மாம்பழங்களின் மூலம் இந்த ஜூஸ்கள் தயாரிக்கப்டுகின்றனவா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அந்த வகையில், செயற்கையான முறையில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மாம்பழ ஜூஸ் தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளுடன், மாம்பழத்தைப் போன்ற மஞ்சள் நிறம் வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சர்க்கரையை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைகின்றனர்.

    இதுதான் உங்களின் மாம்பழ ஜூஸ் என்ற கேப்ஷனுடன் இஸ்டாகிராமில் இந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில், இதைப்பார்த்த நெட்டிஸின்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

    • 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
    • சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

    வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில்  சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.

    இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

     சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.
    • வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன.

     மத்தியப்  பிரதேசத்தில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் புதையும் அளவுக்கு டிரக் மூலம் அவர்கள்மீது மண் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரேவா  மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் சரளை மண்ணை சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தியா நிலையில் அந்த டிரக்கில் இருந்த மண் இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.

    உடனே அருகில் இருந்த கிராம வாசிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்களை  மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன. 

    • டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
    • இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.

    மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார்.
    • அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார்.

    அர்ஜென்டினவைச் சேர்ந்த கால்பந்துலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமாக இருப்பதில் பல்வேறு பிரச்சைனைகளும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் என ரசிகர்களின் அன்புத் தொல்லையை பல பிரபலங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில், வேலியை எகிறிக் குதித்து மைதானதுக்குள்ளேயே வந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    எனவே இவ்வாறான அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் மெஸ்ஸியின் பாடிகார்டான யாசைன் சூகோ தனது அசாதாரணமான முன்னுணர்வால் அதாவது ரிப்ளெக்ஸ்கலால் மெஸ்ஸியிடம் ஓடிவரும் ரசிகர்களை அவர்கள் நெருங்குவதற்குள் சடாரென முன்வந்து தடுத்துவிடுகிறார்.

    Messi's bodyguard byu/Efficient_Sky5173 ininterestingasfuck

    அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் இருந்த யாசைன் சூகோ ஈராக்கிலும் , ஆப்கனிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். மெஸ்ஸி கேப்டனாக இருக்கும் மியாமி கிளப் கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்கம் ரெக்கமெண்டேஷனில் யாசைன் மெஸ்ஸியின் பாடிகார்ட் ஆகியுள்ளாராம்.  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டும்  பிரபலமாகியுள்ளார் யசைன் சூகோ.

     

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
    • லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது

    டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    • வீட்டின் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    • வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

    இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் நயன்தாரா இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது.

    தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புதிய வீட்டில் நயன்தாரா குடியேறி இருக்கிறார். வீட்டின் முன்னால் எடுத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.

    புதிய வீட்டுக்கு சென்ற நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    ×