search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    சென்னை:

    குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கனமழை நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    திருவாரூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறை தகவல்.
    கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    அவ்வகையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படடுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Specialbus

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பஸ்களும், கோவளத்திற்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பஸ்களும், மாம்மல்லபுரம்- 7 பஸ்களும் விடப்பட்டுள்ளது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.

    இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. #Specialbus

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக எல்லையில் 5 கிலோ மீட்டருக்குள் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6 மணிவரையில் மூடி வைக்க வேண்டும்.

    அதேபோன்று தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி இரவு 12 மணிவரையிலும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்திலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் மற்றும் மதுக்கூட்டங்களை மூடி வைக்க வேண்டும். ஆக மொத்தம் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #ParliamentElection
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாளாகும். அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் (19-ந் தேதி) புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    பொதுவாக இதுபோன்று தொடர் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  #ParliamentElection
    பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்ய தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற (பிரெக்ஸிட்) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலை பெற்றார். இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    மார்ச் 29-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக தனிச்சட்டம் உருவாக்கி ஒப்புதல் பெற வேண்டும். எனவே ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்யவும் தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    படுகர் இன மக்கள் ‘அட்டி’ என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.
     
    இதையொட்டி வருகிற 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நீலகிரியில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ஈரோட்டில் இன்று விடுமுறை கேட்டு ஆம்புலன்சில் அரசு பஸ் டிரைவர் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது35). இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பாபு தமிழக போக்குவரத்து கழகத்தில் கடந்த 5 வருடமாக பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பாபுக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பாபு மனைவி மலர்கொடி சென்னிமலை ரோடு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளரிடம் நடந்த விவரங்களை கூறி கணவருக்கு விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் கிளை மேலாளர் விடுமுறை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்று பாபு தனது மனைவியுடன் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்துக்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாபு தனது மனைவியுடன் துணை மேலாளர் அறைக்கு சென்று துணை மேலாளரை சந்தித்து விடுமுறை கடிதத்தை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திரும்பி சென்றார். 

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார். #HighCourt #Holidays
    சென்னை:

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27-ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.

    ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17-ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18-ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5-ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12-ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2-ந் தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ந்தேதி யும் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

    இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. #HighCourt #Holidays 
    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #HeavyRain
    காரைக்கால்:

    தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வந்தது.

    இன்று அதிகாலை காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேப்போல் திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. #HeavyRain
    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rameswaramfishermen #Fishermen

    ராமேசுவரம்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் கஜா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    கஜா புயல் கரையை கடந்த பிறகு கடல் கொந்தளிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.

    இந்த நிலையில் தற்போது தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் உள்மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று கடலுக்கு செல்ல இருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திடீரென தடை விதிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச் சோடி காணப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் தொடர் மழை பெய்தது.காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். #Rameswaramfishermen #Fishermen

    ×