என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94689"
- குளிா்ந்த காற்றும் வீசியது.
- மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது
அரியலூா்:
அரியலூா் மாவட்டம் முழுவதும் சாரல் மழைபெய்தது. காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் குளிா்ந்த காற்றும் வீசியது.
தமிழகத்தில் இரு நாள்கள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அரியலூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழுா், திருமானூா், செந்துறை, ஸ்ரீபுரந்தான், பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பிற்பகல் முதலே ஜில்லென்று சாரல் மழை பெய்தது. மேலும் குளிா்ந்த காற்றும் அவ்வப்போது வீசியதால் இதமான சூழல் காணப்பட்டது.
- நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது.
- மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பு மழை அளவை காட்டிலும் 323.73 மில்லி மீட்டர் கூடுதலாகும்.
மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 30 ஏரிகள்
முழுமையாக நிரம்பி யுள்ளன.
23 ஏரிகள் நிரம்பாத நிலையில் உள்ளன. மீதமுள்ள 26 ஏரிகள் பாதி அளவிலேயே நிரம்பி இருக்கின்றன. இன்னும் ஓராண்டுக்கு வேளாண் பணிகளுக்கு தேவையான நீர் இருப்பு நிரம்பிய ஏரிகள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். நிரம்பிய ஏரி களின் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள விவசாயிகள், தேங்கியுள்ள மழை நீரை கொண்டு தற்போது நெல் மற்றும் சிறுதானியங்கள் நடவு பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் நெல் 8, 962 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 71,690 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 10,443 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 30,564 ஹெக்டேரிலும், கரும்பு 8,286 ஹெக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவற்றில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவா னது வளர்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு, வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை வளர்ச்சி நிலையிலும், ஆமணக்கு வளர்ச்சி மற்றும் பூப்பறிவு நிலையிலும், பருத்தி வளர்ச்சி நிலையிலும், கரும்பு வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும் உள்ளன.
மேலும் தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக மர வள்ளி 3,295 ஹெக்டேரிலும், சின்ன வெங்காயம் 3,411 ஹெக்டேரிலும், வாழை 2,349 ஹெக்டேரிலும், மஞ்சள் 1,722 ஹெக்டேரிலும், தக்காளி 565 ஹெக்டேரிலும், கத்தரிக்காய் 523 ஹெக்ட ரிலும், வெண்டை 337 ஹெக்டேரிலும், மிளகாய் 292 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
- இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நீர்தாண்ட அச்சங்குளம், உடையநாதபுரம், நகரத்தார்குறிச்சி, நந்திசேரி, காடனேரி உட்பட பல்வேறு கிராமங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, சோளம், குதிரை வாளி , எள் போன்ற பயிர்களை விவசாயம் செய்துவந்தனர் சிறுதானிய பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க பண்ணை குட்டை வெட்டததால் போதிய பருவமழையின்றி சிறுதானிய பயிர்களை கூட காப்பாற்ற முடியத நிலை உள்ளது. இதனால் எள் போன்ற பயிர்களுக்கு கூட மழையை நம்ப வேண்டிய நிலை உள்ளது. அபிராமம் பகுதியில் மகசூல் தரவேண்டிய நிலையில் எள் பயிர் வாடும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். போதிய பருவமழை இல்லததால் நெல் பயிர் கருகி வரும் நிலையில், சிறுதானிய பயிர்களும் மழையில்லததால் கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
- சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது
- இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
பெரம்பலூர்
பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை இதமான தட்பவெப்பநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு 1.45 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் இடைவெளிவிட்டு 3.30 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கியது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரம்பலூர் பகுதியில் ஏற்கனவே ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்களில் நெல், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் கதிர்முற்றியுள்ளன. அவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், இந்த மழையால் அந்த பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்
- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
- கரூரில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம், குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று, நாகப்பட்டினத்துக்கு கிழக்கே, 470 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால், குமரி கடலை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு நேற்றும், இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் மற்றும் காற்றுடன் வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியம் 3:30 மணி முதல் கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம் பாளையம், பசுபதி பாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை, திருமாநிலையூர், சுக்காலியூர், செல்லாண்டிப்பாளையம்,காந்தி கிராமம், சணப்பிரட்டி உள்ளிட்ட கரூர் சுற்று வட்டாரம், மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை விட்டு பெய்தது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த லாலாப் பேட்டை வல்லம், மேட்டுப்பட்டி, வரகூர், வயலுார், மகாதானபுரம் இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
- நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.இதனிடையே மாலை 5 மணியளவில் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்,லேசாக பெய்ய துவங்கிய மழை இரவு சுமார் 7 மணி அளவில் கனமழையாக மாறியது.
பின்னர் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால், ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம்,மாணிக்காபுரம் பிரிவு,பனப்பாளையம் போன்ற பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது
.இதனால் பல்லடம் வழியே திருச்சி,கரூர்,கோவை,பொள்ளாச்சி,உடுமலை,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வரிசையாக ஊர்ந்து செல்கின்றன.நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 20-ந் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18 ந் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19ந் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 20ந் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.20,000/- இழப்பீடு வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுப்பணித்துறை ஊழியர்கள் யாரும் வராததால் மழை நீரையும் வெளியேற்ற இயலவில்லை.
பூதலூர்:
பூதலூர் தாலுக்காவில் நேற்று ஒரே நாளில் பெய்த அதிகனம ழையினால் வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
முன்புபெய்த கனமழை யினால் அழிந்த பயிர்களுக்கு மாற்றாக மீண்டும் இரண்டாவது முறையாக நடவு செய்தநிலையில், மீண்டும் மழையில் மூழ்கி முற்றிலும் அழிந்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
வாரிகளும், வாய்க்கா ல்களும் தூர்வா ரப்படா ததாலும், பராமரிப்பு பொதுப்பணித்துறை திருச்சி வசம் உள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் யாரும் வராததால் மழை நீரையும் வெளியேற்ற இயலவில்லை.ஆகவே மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.20,000/- இழப்பீடு வழங்கிட கோரியும், வெள்ள நீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை நடவடிக்கைகள் எடுக்க கோரியும், வேளாண்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சேத பாதிப்பை உடனடியாக பார்வையிட்டு கண்டெடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மழையால் மூழ்கிய வெண்டயம்பட்டி கிராம வயல்களில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர்.முகில், தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர்.
கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கள்கிழமை (19.12.22) பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
- பலத்த மழையால் நடவு பணிகள் பாதிப்படைந்த
- திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ.,
அரியலூர்:
வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ., அரியலூர் 5.2 செ,மீ. மழை பதிவானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் நடவு மற்றும் களை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
- உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
- கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,
மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.
இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.
அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.
சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்