search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94716"

    • இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
    • விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த வீரமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள சாகுபடி வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டும், சாகுபடி பருவத்தின் போதும் இதேபோல், நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியதாகவும், இந்த ஆண்டும் இதேபோல் நடைபெற்று வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிடாமல் இருக்க வைக்கோல் மூட்டம் போடப்பட்டுள்ளது. அதையும் களைத்து, நாற்றங்காளை காட்டு பன்றிகள் நாசமாக்குகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

    இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டு பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசின் பயனுள்ள திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விவசாயி களுக்கு அரசின் திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ் துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்க ளின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்பட்டு வரு கிறது.

    அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்க ளுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறை ரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது. அதனை, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மேட்டூர் அணையை திறக்க இருப்பதால் அதற்கு முன்பாக விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
    • விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, ஜூன் 12-ந்தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க இருப்பதால் அதற்கு முன்பாக விவசாயிகள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், ஒரு நபருக்கு மானிய விலையில் 20 கிலோ மட்டும் வழங்கும் நடைமுறையை மாற்றி விவசாயிகளின் நிலப்பரப்பிற்கு ஏற்ப தாராளமாக விதை நெல் கிடைக்கவும், இடுஉரம் வழங்கவும், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கவும், அரசின் உதவித்தொகை பெறுவதற்கு வங்கிக்கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் செலுத்த வலியுறுத்தாமல் இருக்கவும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை” புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கே.எம்.எஸ் 2022-2023 பருவத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று முதல் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்ப னைக்காக ஆன்லைனில் பதிவு செய்யும் போது "பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை" புதிதாக அறிமுகப்படு த்தப்படுகிறது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல்ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன் பெறும் வகையில் நெல்லினை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும் .

    பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண்ணிற்கு ஓடிபி பெறுவதன் மூலமும், விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று கொள்மு தல் நிலையங்களிலேயே சரி பார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை செய்துகொள்ள விவசாயிகள் கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கும் அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
    • மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனாவாலை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.

    சென்னை:

    புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், சுகாதார நலப்பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான 'ரேப்பிட் இமுனிசேசன் ஸ்கில் என்கேன்ஸ்மென்ட்' செயலியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கும், பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கும் அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட தேவைகளை விளக்கிக்கூறி, இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச உள்ளோம்.

    அதன் பிறகு மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனாவாலை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறிய குறைபாடுகளுக்கு எல்லாம் அங்கீகாரம் ரத்து போன்றவை ஏற்புடையது அல்ல.

    • விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றுடன், நெற்றியில் நாமமிட்டு, கையில் நாணலுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
    • திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதினால் முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகாமில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,027 பயனாளிகளுக்கு 5 கோடி 12 லட்சம் மதிப்பிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில்:-

    மனுநீதி நாள் முகாம்களில் மக்களின் குறைகளை போக்குவதற்கு அவர்களின் பகுதிகளிலேயே நேரடியாக சென்று அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மக்கள் நலதிட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு தகுந்த தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதுபோன்ற குறை தீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மக்களுக்காக பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் முன்னேறி வருகின்றனர். வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக இலாபம் பெறலாம். இதனை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் நமது பாரம்பரிய சிறுதானிய வகை உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, உதவி ஆட்சியர் (சிதம்பரம்) சுவேதா சுமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மானாமதுரை

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பரமாத்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, பொருளாளர் காசிராஜன், முனியராஜ், வெள்ளமுத்து, முத்துராமன், குமரேசன், பெலிக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.
    • வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம்.

    அவினாசி :

    சேவூா் பகுதியில் இரவு நேரத்தில் முறையற்ற முறையில் மும்முனை மின்சாரம் விநியோகத்தால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சேவூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், புலிப்பாா், தாமரைக்குளம், சாலைப்பாளையம், ராமியம்பாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூா், நட்டுக்கொட்டையான்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.

    இந்த விவசாயிகள் வாழை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களை அதிக அளவில் பயிரிடுவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்த கூடிய மும்முனை மின்சாரம் இரவு மற்றும் பகல் நேரங்களில் முறையற்று விநியோகிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வாடிப்பட்டி அருகே விவசாயிகளின் அடிப்படை விவர பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இந்த முகாமை வேளாண் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விராலிப் பட்டி பஞ்சா யத்தில் வேளாண்மை அடுக்கு என்ற விவசாயிகள் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை வேளாண்மை உற்பத்தி ஆணையர்-அரசு செயலாளர் சமயமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    விராலிப்பட்டி ஊராட்சி யில் மொத்தம் 804 புலஎண்களில் 517 புல எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள புல எண்கள் விரைந்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. நில விவரங்கள் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரங்களை வேளாண் சார்ந்த 13 துறைகளின் திட்டங்களை ஒற்றை சாளர வலைதளம் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    நிதி திட்ட பலன் ஆதார் எண் அடிப்படையில் வங்கிக் கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப் படும். இந்த வலைதளம் பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய முடியும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பலன் பெறலாம்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படும் திட்டங்கள், 300 குடும்பங்களுக்கு 2 தென்னங் கன்று வழங்குதல், திரவ உயிர் உரம், தெளிப்பான்கள் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தார்பாலின், ஜிப்சம், ஜிங் சல்பேட், பண்ணை கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கப் படும் பவர் டிரில்லர், பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு ஆழ்துளை கிணறு ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமுதன் மற்றும் அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், துணைத்தலை வர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் செந்தாமரை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தென்னங்கன்று ஒன்றிற்கு ரூ. 40 வீதம் மானியம் பெறலாம்.
    • உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி ( பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தென்னை சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் 7500 எக்டருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

    இதில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காய்க்காத மரங்கள், வயது முதிர்ந்த மரங்கள் காணப்படு கின்றன. இவற்றை வெட்டி அப்பறப்ப டுத்துவதற்கு தென்னை மரம் ஒன்றிற்கு ரூபாய் 1000 வீதம் அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு 32 மரங்களுக்கு மானியம் பெறலாம்.

    தென்னை மரங்களை அப்புறப்படுத்திய பிறகு அவ்விடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்கு தென்னங்கன்று ஒன்றிற்கு ரூபாய் 40 வீதம் மானியமும் அதிகபட்சமாக ஒரு எக்டரில் 100 தென்னங்கன்றுகளுக்கு மானியம் பெறலாம்.

    தென்னந்தோப்புகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தை செயல்படுத்திட முதலாம் ஆண்டு ரூ.8,750/ எக்டர், இரண்டாம் ஆண்டு ரூ.8,750 எக்டர் மானியமாக பெறலாம்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை நேரில் அணுகி அல்லது உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.

    ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.

    ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.

    மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.

    இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ×