என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95142"
- மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தஞ்சை வல்லம் செல்வி கிராமிய தெம்மாங்கு ஆடல் பாடல் இன்னிசை குழுவினரின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார். சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்தப்பட்ட அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட உள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
- அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவா மற்றும் வீரையன் ஆகியோர் அருகிலுள்ள கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்துடன் சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது.
அருகில், சிவா என்பவரது வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இதில், இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
இந்த சம்பவம் குறித்து கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால், மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாழையூத்து காமராஜர் நகரை சேர்ந்தவர் புதியவன் செல்வன் (வயது 28). தொழிலாளி. நேற்று மாலை இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேலப்பாட்டம் அருகே சென்றபோது பலத்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.
அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் சுரேஷ் (வயது30). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் பணிமுடிந்து திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இளையான்குடி போலீசார், அவரது உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து பற்றி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சந்தவாசல் அருகே உள்ள அனைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சதீஷ்குமார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரகட்டு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி லதா (வயது 31). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாளை மண்டல அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே ரோட்டில் திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ், மாடு மீது மோதி, கவிழ்ந்தது.
இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி லதா மற்றும் அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் நோயாளி லதா பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் செல்வி மற்றும் சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரியை சேர்ந்தவர் சங்கீதா(வயது 37). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் வேளச்சேரி 100 அடி சாலை, குருநானக் கல்லூரி சந்திப்பில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்து திரும்பிய தனியார் பஸ் சங்கீதாவின் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய சங்கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜை கிண்டி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
அப்போது, எதிரே வந்த சரக்கு ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஜமுனாபர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஷஷி பிரகாஷ் கூறியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தேவாரம் (வயது 7). அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலையில் மேல்மாந்தை கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் ஒரு வண்டியில் விற்றுக்கொண்டு இருந்த சப்போட்டா பழத்தினை வாங்கிய தேவராம், சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது வேம்பாரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் தேவாரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி டிரைவர் தூத்துக்குடி செவலை சேர்ந்த காசி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ரெயில் பயணிகள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்