என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95143"
நைரோபி:
சோமாலியாவில் அல்- ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது.
இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடந்த குண்டு வீச்சில் 34 பயங்கரவாதிகளும், 18-ந்தேதி நடந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2 நாட்கள் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.
இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.
சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.
பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், “அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.
சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
மதுரை:
மதுரை ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது58). ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அய்யனார் சம்பவத்தன்று காலை பணிக்கு வந்தார். அப்போது தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்தார்.
இதில் அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக அய்யனாரின் மனைவி ஆயம்மாள் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.
மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #Syria #CarBomb
மேலூர்:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது38). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் இவர் அங்கேயே வசித்து வந்தார்.
இந்த நிலையில் மாணிக்கம் தனது மனைவி நாகம்மை, மகன் முத்துராமன் (6), 10 மாத பெண் குழந்தை முத்து மீனா ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.
மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வலைச்சேரிபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகம்மை மற்றும் 2 குழந்தைகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் வசந்தி, ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலூர் அருகே உள்ள திருவாதவூரை அடுத்துள்ள பழையூரைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருவாரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அஜித்பாண்டி படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலூர் அருகே உள்ள சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (70). இவர் கூத்தப்பன்பட்டி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் தேன்மொழி (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த தேன்மொழி தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அவரை, அவரது தாயார் கல்யாணி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக தேன்மொழி தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி அஞ்சலை (வயது 37). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு கீழாண்டை வீதியை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் நிஷாந்தி (வயது 18) பிளஸ்-2 முடித்த இவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். நேற்று மாலை நிஷாந்திக்கும் அவரது தந்தை ஜெகனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஜெகன் மகளை திட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்த நிஷாந்தி வீட்டில் யாரும் இல்லாத போது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிஷாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்
வலங்கைமான் அருகே புளியக்குடி வாய்க்கால் கீழப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி (வயது 70). இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே சாலையோரத்தில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது புளியக்குடியில் இருந்து வலங்கைமான் நோக்கி வந்த தனியார் பள்ளி வேன், சூர்யமூர்த்தி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யமூர்த்தி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.
அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.
இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.
அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.
இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்