என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிபிஐ"
- அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.
- திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
புதுடெல்லி:
நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மையக் கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டது. அவர்கள், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.
திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வியாழக்கிழமை பாட்னாவில் 4 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக கேள்விகள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பேப்பர் லீக்கிற்கு மூளையாக செயல்பட்ட பி.டெக் படித்தவரான சஷி காந்த் பஸ்வான் மற்றும் இரண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.
ஜாம்ஷெத்பூரின் தேசிய இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி கல்லூரியில் பி.டெக் படித்தவரான சசி மற்றும் பாசு என அழைக்கப்படும் சஷி காந்த் பஸ்வான் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள குமார் மற்றும் ராக்கி ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படிக்கும் குமார் மங்களம் மற்றும் தீபேந்திர சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மாணவர்களும் மே 5-ந்தேதி (நீட் தேர்வு நடைபெற்ற தினம்) ஹஜாரிபாத்தில் இருந்துள்ளனர். இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பங்கஜ் குமார் உடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ ஆறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 21 பேரை கைமுது செய்துள்ளது.
நேற்று ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை சிபிஐ கைது செய்தது.
பங்கஜ் குமாரின் என்ற ஆதித்யா (சிவில் இன்ஜினீயர்) ஹஜாரிபாத் என்டிஏ டிரங்கில் இருந்தில் பேப்பரை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட. குமாரி என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.
பாட்னா எய்ம்ஸில் படிக்கும் நான்கு எம்பிபிஎஸ் மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு வழங்க பேப்பர் லீக் கும்பலிடம் வழங்கியவர்கள் ஆவார்கள்.
- 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு அம்மாணவியை சிபிஐ கைது செய்தது.
- பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.
ராஞ்சி:
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
ஹசாரிபாக்கில், தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டில் இருந்த நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன சிவில் என்ஜினீயர் பங்கஜ் குமாரை கைது செய்துள்ளது. அவருக்கு உதவி செய்த ராஜு சிங் என்பவரும், சுரேந்தர் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் சிபிஐ வளையத்தில் சிக்கினார். அவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்.
கடந்த 17-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சிபிஐ அதிகாரிகள், அம்மாணவியை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். நிர்வாகம் அனுமதி அளித்தநிலையில், மாணவியிடம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் விசாரணை நடத்தினர்.
2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று அம்மாணவியை சிபிஐ கைது செய்தது. அவர் பெயர் சுரபி குமாரி.
பங்கஜ் குமார் திருடி எடுத்து வந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையை குறித்துக்கொடுக்க சுரபி குமாரியையும், பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.
அவர்கள் குறித்துக்கொடுத்த விடைகளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதே பங்கஜ் குமாரின் திட்டம்.
கைது குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
- விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பாட்னா:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
- சிபிஐ விசாரணைக்கு முன்னதாக மாநில அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற வேண்டும்.
- தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் இந்த விதியை நடைமுறைப்படுத்தியுள்ளன.
மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ தனி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்தியாவில் உள்ள எந்தவொரு பகுதியில் உள்ள தனி நபர், அரசு அதிகாரி உள்ளிட்டோரை விசாரணை நடத்தவும், அவர்களுடைய இடங்களில் சோதனை நடத்தவும் அதிகாரம் உண்டு
ஆனால் மத்திய அரசு சிபிஐ-யை தவறாக பயன்படுத்துகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிபிஐ மூலம் அங்குள்ள தலைவர்களை சோதனை என்ற பெயரில் மிரட்டி பணிய வைக்க முயல்வதாக அடிக்கடி குற்றச்சாட்டுவது உண்டு. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் சிபிஐ அனுமதி பெற்ற பிறகே மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
சிபிஐ தனது அதிகார வரம்பில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன் மாநிலத்திடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 1-ந்தேதி முன்தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் 6-வது பிரிவின்படி, அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதலை பெறுவது அவசியம்.
உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலமும் இந்த முடிவை எடுத்திருந்தது. பின்னர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பின் அது திரும்பப் பெறப்பட்டது.
- சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல்.
- இடைக்கால ஜாமின் கேட்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
சிபிஐ கைது செய்ததுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தன்னை சிபிஐ கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதையும் எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது. அதேபோல் இடைக்கால ஜாமின் கேட்க மனு மீதான உத்தரவையும் ஒத்திவைத்துள்ளது.
இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி சிங் "மக்களவை தேர்தலுக்காக மட்டும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 21 நாள் இடைக்கால ஜாமினை அவருடைய வசதிக்காக பயன்படுத்த முடியாது. அது தேர்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டது.
பணமோசடி வழக்கில் ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், டெல்லி உயர்நீதிமன்றம் அந்த ஜாமினுக்கு தடை வழங்கியதுடன், அதற்கான 30 பக்க அளவிலான காரணத்தையும் தெரிவித்துள்ளது.
வெறுமென சந்தேகம் இருந்தால் கூட தனி நபரை கைது செய்ய சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது. முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அந்த நேரத்தில் சிபிஐ-யிடம் போதுமான காரணம் இருந்தது. சிஆர்பிசி (CrPC) விசாரணைக்கான கைது செய்ய அனுமதி வழங்குகிறது.
கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானதால் அவரைக் கைது செய்வது அவசியமானது. சிபிஐ விசாரணையை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது முதல்வர் செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்" என வாதிட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி "டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏன் கேட்கக் கூடாது என்பதற்கான காரணத்தை சிபிஐ கொடுக்கவில்லை. சிபிஐ-யின் நிலை தாமதப்படுத்தும் தந்திரம்.
கெஜ்ரிவால் மீதான சமீபத்திய புதிய ஆதாரம் ஜனவரி 2024 ஆகும். ஜனவரி 2024-க்குப் பிறகு சிபிஐ புதிய ஆதாரத்தை பெறவில்லை. தற்போது சிபிஐ ஜூன் 13-ந்தேதி புதிய ஆவணங்களுடன் வந்துள்ளது. இது எங்கும் பயன்படாது. கைதுக்கு பிந்தைய ஆவணங்கள் கொடுக்க முடியுமா?.
நீங்கள் 41A நோட்டீஸ் கொடுத்தபோது அதை நீங்கள் சமர்பிக்கவில்லை. அது எங்கே இருக்கிறது? வாய்மொழியாக மட்டும் சொல்ல முடியாது. முழு விசயத்தின் அடிப்படையில், கெஜ்ரிவாலின் கைதுக்கு நியாயப்படுத்த புதிதாக எதுவும் இல்லை" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.
- பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
- முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.
பாட்னா:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.
அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.
ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பீகாரின் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசியவிடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்" என கூறினார்.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.
- முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.
- கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
- காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக் கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கை கள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக் கிணங்க ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர்.
- 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
புதுடெல்லி:
நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 12 பேரை சிபிஐ கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் இதுவரை ஜாமீன் பெற்று இருக்கிறார்கள்.
நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை விசாரித்த கோர்ட்டு அவர்களை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து சிபிஐ பாட்னா ஐகோர்ட்டை நாடியது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரித்தார்.
விசாரணை முடிவில் பீகார் போலீசார் கைது செய்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்களை இன்றே (நேற்று) சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சிறை நிர்வாகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
பீகாரில் நீட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 13 பேருக்கும் அவருடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து சிபிஐ விரிவான விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
- சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இதில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக கூறி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோரை கொண்ட அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இடைக்கால ஜாமின் கிடைத்த போதிலும், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத காரணத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது.
- வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது.
இந்த மோசடியை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடிகளை தொடர்ந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்திருக்கிறது. இவை ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
சமீபத்தில் கூட ஜார்கண்டின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டார்.
பீகாரின் நாலந்தாவை சேர்ந்த இவர் தலைநகர் பாட்னா அருகே அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் ஆவார்.
கைது செய்யப்பட்ட ராகேஷ் ரஞ்சன் பின்னர் பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரில் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னதாக பீகார் மற்றும் ஜார்கண்டில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆதாரங்கள மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது.
நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்