search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பம்"

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    • அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா  முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

    • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிற்சி முகாம் நடந்தது.
    • சிலம்பம் மாணவிகளுக்கு கல்லூரி சான்றிதழ் வழங்கியது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான வளரி, சிலம்பம் தொடர்பான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட வீராங்கனைகள் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இன்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தேவராட்டம், சிலம்பம் மருத்துவர் குழு மாவட்ட செயலாளர் முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது மணக்கோலத்தில் சிலம்பம் ஆடினேன்.
    • பல்வேறு ஊர்களுக்கு சென்று மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

    திருநெல்வேலி:

    நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் உணவகம் நடத்தி வரும் பழனி-கோமதி தம்பதியரின் மகன் சங்கரநாதன். சிலம்ப கலைஞர். இவருக்கும், நெல்லை டவுனை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் பொன்னாக்குடி அய்யா வைகுண்டர் பதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்து வெளியே வந்த புதுமாப்பிள்ளை சங்கரநாதன் மணக்கோலத்தில் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் ஆடி அசத்தினார். அதை பார்த்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதுகுறித்து சங்கரநாதன் கூறுகையில், 'சிலம்பம் என்பது நமது பாரம்பரிய தற்காப்பு கலை. சிறப்புமிக்க இந்த கலை அழிந்து விடக்கூடாது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது மணக்கோலத்தில் சிலம்பம் ஆடினேன். மேலும் சிலம்ப கலையை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இதை செய்தேன்.

    நான் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். பல்வேறு ஊர்களுக்கு சென்று மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன்' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    • மதுரையில் சிலம்பம்-வளரி கருத்தரங்கு நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ் இயல் துறை மற்றும் மருது வளரி சங்கம், இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கேரள மாநிலம், கொழிஞ்சாம் பாறையில் சிலம்பம்- வளரி தொடர்பாக 2 நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது.

    இதில் தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவ இயக்குனர் சத்தியமூர்த்தி, இண்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்- மதுரை மருது வளரி சங்க மதுரை மாவட்ட செயலாளர் முத்துமாரி, கொழிஞ்சாம்பாறை பாரதமாதா கல்லூரி முதல்வர் பவுல் தேக்கநாத், பயிற்சியாளர்கள் விஜயன், ரதிஸ், நந்தகுமார், விக்னேஷ்வரன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கேரள மாநில உணவு வழங்கல் கழக மேலாண்மை இயக்குநர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார்.
    • இதில் 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களை கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம் வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலை சங்கமம் 2022 விழா தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். காளிசரண், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளு க்கு கேடயங்கள்பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலம்பாட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

    வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.4 மாணவிகள் 5 மணிநேரம் 5வகை ஆயுதங்களைக் கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.மணிகண்டன் என்கிற மாணவர் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடர்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தார்.பிரவீன் என்ற மாணவர் கற்கால போர்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணிநேரம் தொடர் சாதனை செய்தார்

    அதேபோல் ராஜே ஷ்குமார் என்ற மாணவர் 5 கிலோ கரலாக்கட்டை 3565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டார்.உலக சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அக்கழகத்தின் நிறுவனர் ஆசான் டாக்டர் பி சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

    • ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
    • அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாகை அவுரி திடலில் கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது விறுவிறுப்பான சினிமா பாடல்களுக்கு ஏற்ப உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் சிலம்பு சுற்றியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ெமய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சிலம்பம் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பம் பயிற்றுநர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் .சிலம்ப கலையை ஊக்குவிக்கும் 100 ஆசாங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.

    • போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
    • தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    வீ.கே.புதூர்:

    உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி பாவூர்சத்திரம் செயின்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்ட தலைவர் சத்தியசீலன் வரவேற்றுப் பேசினார். இப்போட்டியை தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சுரேஷ்,செல்வராஜ், சட்ட ஆலோசகர் ஆலங்குளத்தை சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமையேற்றார்.மேலும் கழக அமைப்பு பேச்சாளர் ராமச்சந்திரன், எம்.எம். ஜவுளிக்கடை அதிபர் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.

    தகுதி திறன் போட்டியில் முருகேஷ், புவணிகா,கவுதமி ஆகியோரும், தொடுதிறன் போட்டியில் சிவதீபக், பாலாராமகிருஷ்ணன், அருள்ரீகன் ஆகியோரும், இரட்டை கம்பு பிரிவில் ருத்ரன், தமிழமுதன், பவித்ரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சட்டப்பேரவையில் அறிவித்தப்படி வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் சிறந்த சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்தது. சிலம்பம் விளையாட்டை 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    அதன்படி சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். 

    மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×