search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97500"

    • ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடு புகுந்து வாசுதேவனை தாக்கினர்.

    மதுரை

    மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக் கும், இவரது சகோதரர்க ளுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

    இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு புகுந்து வாசுதேவனை சரமாரியாக தாக்கினர்.

    இது தொடர்பாக வாசு தேவன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாதவன், காஞ்சனா, சாரதா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் காஞ்சனா கொடுத்த புகாரின் அடிப் படையில் வாசுதேவன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை யும் போலீசார் கைது செய்தனர்.

    • கொளுந்தனுடன் தகாத உறவால் கணவர் வெறிச்செயல்
    • வாளுடன் சென்று போலீசில் சரண்

    திருச்சி,

    திருச்சி கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேன்களாகபணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு மாரியம்மாள் (வயது 25) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது மனைவி மகன்களுடன் தனியாகவும், ரகுநாத் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரகுநாத்திற்கு அண்ணி மாரியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள்செல்போன்களில்ஆ பாச படங்களை பரிமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனை கேள்விப்பட்டு அமர்நாத் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் தனது மனைவியின் கழுத்தை வாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.இதனையடுத்து வெட்டிய வாளுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கன்வாடி மைய கட்டுமான பணி ஆய்வின் போது தாக்குதல்
    • ரியல் எஸ்டேட் அதிபர் கைது

    திருச்சி,

    திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். (வயது 51). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி. இவர் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் . இந்த நிலையில் கவுன்சிலர் தங்கலட்சுமி அவரது கணவர் தசரதனுடன் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வேலன் (வயது 38) என்பவர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன் தசரதனை மூக்கில் குத்தியுள்ளார் .இது குறித்து தசரதன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிந்து சஞ்சய் வேலனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சஞ்சய் வேலன் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் ராஜீவ் காந்தி (36). இவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். மதுரை ஆண்டார் கொட்டாரம், அய்யனார் நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (46). இவருக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பாண்டிகோவில் ரோட்டில் உள்ள பாரில் ராஜீவ் காந்தி, பிரதீப் குமார் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    • கோழி வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2பேரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை எம். சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வடவள்ளி (வயது55). இவர் கல்லம்பட்டியில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வடவள்ளி மற்றும் உறவினர் பாக்கியம் ஆகிய 2பேரும், இரவு பண்ணையில் இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த 2பேர், பண்ணைக்குள் அத்துமீறி புகுந்து தகராறு செய்தனர். அதனை வடவள்ளி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2பேரும் அவரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வடவள்ளி, பாக்கியம் ஆகிய 2பேரும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடச்சனேந்தல் பட்டர் மகன் சீனிவாசன் (23), திருப்பாலை கோவிந்தன் (42) ஆகிய 2பேரை கைது செய்தனர்.

    • பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் சத்தியா (வயது 27).இவரது கணவர் காளிராஜ் (30). இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சத்தியாவை கணவர் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து சத்தியா பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்த்துவைத்துள்ளனர். இந்த நிலையில் கணவர் மீண்டும் தகராறு செய்ததால் சத்தியா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்த காளிராஜ், சத்தியாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சத்தியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் காவலாளியை தாக்கினர்
    • புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் இடையார் காலனி தெருவை சேர்ந்த பிச்சபிள்ளை என்பவரது மகன் ரஜினிகாந்த் (வயது 38). இவர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் ஒப்பந்த அடிப்படையில் (காப்பாளராக) பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் பணியில் இருக்கும் போது குடிபோதையில் வந்த திருக்களப்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் கூலி தொழிலாளியான விக்ரம் (36) என்பவர் தன் மனைவி சிவசக்திக்கு குழந்தை பிறந்ததை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

    அப்போது ரஜினிகாந்த் இரவு நேரம் என்பதால் நோயாளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், காலையில் வந்து பார்க்கலாம் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம் ரஜினிகாந்தை தகாத வார்த்தைகளால் பேசி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதில் காயமடைந்த ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விக்கிரமை கைது செய்தனர். மேலும் அரசு மருத்துவமனை காப்பாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • காதலை கைவிட வற்புறுத்தியதால் ஆத்திரம்
    • போலீசார் வழக்கு பதிந்து 3 பேரிடம் விசாரணை

    திருச்சி,

    திருச்சியை அடுத்துள்ள இனாம்குளத்தூர் பட்டிக்காட்டான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹவுஸ் முகமது (வயது 47). இவரது மகளுக்கும், இனாம்குளத்தூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த ஷேக் மொய்தீன் (22) என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.இந்த காதல் விவகாரம் ஹவுஸ் முகமதுவிற்கு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மகளை கடுமையாக கண்டித்தார். மேலும் ஷேக் மொய்தீனிடம் தனது மகளுடனான காதலை கைவிடுமாறு வற்புறுத்தி உள்ளார்.இது ஷேக் மொய்தீனை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரர் ஷேக் முகமது, தந்தை ராஜா முகமது ஆகியோருடன் சென்று இனாம்குளத்தூர் பஜார் பகுதியில் ஒரு மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த ஹவுஸ் முகமதுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த ஹவுஸ் முகமது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசார் காதலன் சேக் மொய்தீன், அவரது சகோதரர் ஷேக் முகமது, தந்தை ராஜா முகமது ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் மோகன் (வயது 40). மீனவர். இவரது மனைவி மீனா (வயது 37). அதே பகுதியை சேர்ந்தவர் பூவராகவன். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பூவராகவன், ராமதாஸ் ஆகியோர் மோகனை வழிமறித்து இரும்பு கம்பி யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மோகன், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் முது நகர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கணவன்-மனைவி இருவரும் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நடைபயிற்சி சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீர ஜெயப்பிரகாசையும், அவரது மனைவி அமுதினியையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

    பொன்னேரி:

    சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி அமுதினி.டாக்டர்களான இருவரும் அப்பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நடைபயிற்சி சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீர ஜெயப்பிரகாசையும், அவரது மனைவி அமுதினியையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் கீழே விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். உடனே மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    தாக்குதலில் பலத்த காயம் அடைந்த தம்பதியினர் இருவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலத்தகராறில் இந்த கொலை முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூப்பிட்ட குரலுக்கு வராததால் சிறுவன் தாக்கப்பட்டார்
    • காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி

    கரூர்,

    குளித்தலையை அடுத்த, பெருமாள் கவுண்டம்பட்டி காலனி, வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் (வயது 15). இவர், கடந்த 21ம் தேதி, பழனி என்பவரது பெட்டிக்கடை அருகே விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது, திருச்சி மாவட்டம், எட்டரை பஞ்சாயத்து கோப்பு கிராமத்தை சேர்ந்த கோபி (வயது 28), சரவணனை அழைத்த போது, வராததால் சிறுவனை தாக்கினார். இதில் காயமடைந்த சரவணன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, சரவணனின் தாய் சுதா அளித்த புகாரின்படி தோகை மலை போலீசார் வழக்குப்பதிந்து, கோபியை கைது செய்தனர்.

    • மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
    • தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×