என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98138"
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
- ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.
இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.
பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.
இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.
இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
- குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.
ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.
இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.
கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை-மும்பை செல்லும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.
மேலும் சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர் எனினும் தொடர் மழையால் வாட்டி வதைத்த வெயில்வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரக்கோணத்தில் 54 மி.மி. மழை பெய்துள்ளது.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கூர் அருகே உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் திடீரென திருச்சி வழி மயிலாடுதுறை சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.
விசாரணையில் பாலமுருகனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததும் அதை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தததும் அதனால் தான் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. ரெயில் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.
தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியை ரெயில் கடந்தது.
அப்போது ரெயில் என்ஜின் பெரிய கல் மீது மோதுவது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தவில்லை.
இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று சிவரக்கோட்டை தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கற்கள் சுக்குநூறாக சிதறி கிடந்தது. விசாரணையில் மர்ம நபர்கள் வேலிக்கு போடும் 4 அடி நீளமுள்ள கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லை வைத்து சதி செயலுக்கு முயன்றது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்கோயில். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று விடுமுறை நாள் என்பதால் அருண்கோயில் அவரது மனைவி ஆகியோர் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு தி.நகருக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சிறுவன் ஆதித்யா பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சார ரெயில் வந்ததை கவனிக்காமல் தவறி விழுந்தான். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்தான்.
தங்கள் கண் முன்னாலேயே மகன் இறந்ததை பார்த்து அருண் கோயிலும், அவரது மனைவியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். திடீரென்று அவர் ரெயில் என்ஜின் ஒன்றின் மீது ஏறியதோடு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் என்ஜினில் இருந்து கீழே இறங்கும்படி அவரிடம் கூறினார்கள். ஆனால், அவர் கீழே இறங்கி வரவில்லை. இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது.
இதைப்பார்த்த வாலிபர் தனது கைகளை அசைத்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள உயர்மின் அழுத்த வயரில் அவருடைய கை பட்டது. இதனால், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடைய உடலை கைப்பற்றிய சிட்டி ரெயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இருப்பினும் அதுபற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை செய்வதாக ரெயில் என்ஜின் மீது ஏறி மிரட்டல் விடுத்து மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ரெயில் நிலையத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாலும், அந்த வீடியோ வெளியானதாலும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை புறநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு சர்க்குலர் ரெயில் விட கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே இதற்கான திட்டப்பணிகளை தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்து நேற்று முதல் சர்க்குலர் ரெயில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது. 194 கிலோ மீட்டர் தூரம் உடைய நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்ட ரெயில் பாதை இதுவாகும்.
பயணிகள், பொது மக்களிடையே இந்த ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டது. பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை கடற்கரைக்கு 2 சர்க்குலர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு - அரக்கோணம் செல்ல ரூ. 15 கட்டணம் . மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ. 270. பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவாகும். இதனால் பயணிகள் சர்க்குலர் ரெயிலை பெரிதும் வரவேற்றுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரை வந்தடைய சர்க்குலர் ரெயிலில் 6 மணி நேரம் ஆகிறது. இச்சேவையை விரைவு ரெயில் சேவையாக மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்குலர் ரெயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அதேபோல அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லாம். மேலும் அரக்கோணத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென் மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.
கட்டிட தொழிலாளவ்கள், அரசு அலுவலர்கள், பெரு நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரும் சர்க்குலர் ரெயில் சேவையால் பெரிதும் பயன் பெறுவார்கள். #train
தென்ஆப்பிரிக்காவில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் போட்டியிடுகிறார்.
இதையொட்டி அவர் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், ரெயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கவுட்டெங் மாகாணத்தின் மெபோபானே நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் ரெயிலுக்காக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதையடுத்து, அவர் மெபோபானேவில் இருந்து தலைநகர் பிரிட்டோரியா செல்லும் ரெயிலில் ஏறினார். மெபோபானேவில் இருந்து பிரிட்டோரியா செல்ல 45 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த ரெயில் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் பிரிட்டோரியா சென்றடைந்தது.
இதனால் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் தவிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர், “இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரெயில்வே நிர்வாகம் நிலைமையை மேம்படுத்தவில்லையென்றால் தலைகள் உருளும்” என்றார். #SouthAfrica #PresidentCyrilRamaphosa
பொன்னேரி:
சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொன்னேரி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரெயில்வே துறை அலுவலகங்கள், ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குலஷேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கம் 4 வழிப் பாதையாக மாற்ற அனுமதியளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு ரெயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ரெயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணச்சீட்டு அலுவலகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தையல் தொழிலாளி. இவரது மகன் சுடலை. இவர் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சுடலைக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று கடைக்கு செல்வதாக சிறுவன் சுடலை வீட்டில் கூறி சென்றுள்ளான். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாரதிநகர் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை உடல் சிதறிய நிலையில் சுடலை இறந்துகிடந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் பலியான சுடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுடலை தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்