என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98767"
சென்னை:
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன்.
அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வினர் உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் ராசபாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காக உழைக்கும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார். அவர் பெண்களின் குறைகளை நன்கு அறிந்து புரிந்தவர். எனவே பெண்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் இது சந்தர்பவாத கூட்டணி. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் இருப்பதாக கவர்னரிடம் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மனு கொடுத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த பகுதியில் சடையனேரி மற்றும் கன்னடியன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் வந்தது.
இப்போது கன்னடியன் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதைப்போல் சடையனேரி கால்வாய் வலுவாக இருக்க வேண்டும். நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நிச்சயமாக ஸ்டாலின் தமிழக முதல்வராக வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். எனவே தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்திட மத்தியிலிருந்து அதிக நிதி பெற்றிட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்த பகுதிக்கு மயான இட வசதி வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நானே நேரில் வந்து இடம் வசதி செய்து தருவேன். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நிற்பது உறுதி. கனிமொழியை குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #anitharadhakrishnanmla #kanimozhi #parliamentelection
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இன்று ம.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #DMK
ஒரத்தநாடு:
சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 17-ந் தேதி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு கிராமத்தில் பெரியாரின் முழு உருவச் சிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பியோடி விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினர் , பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதிப்பு செய்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்துள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று மாலை டி.வி.யில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க.வினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த செய்தியால் கடந்த 2 நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்தார்.
நேற்று கருணாநிதி மரணம் குறித்த செய்தி வந்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியடைந்து உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிகாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். டெய்லர் வேலை பார்த்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் கருணாநிதியின் மரணம் குறித்த செய்தியை கேட்டதும் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனுக்கு மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் தர்மக்கொடி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மறைந்தார் என்பதை அறிந்து மாரடைப்பால் இறந்து போனார். #KalaignarDeath #Karunanidhi #DMK
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஒருவர் எட்டயபுரம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). இவர் அங்குள்ள 13-வது வார்டில் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். தி.மு.க. மீதும், கருணாநிதி மீதும் அதிக பற்றுக்கொண்டவர்.
தி.மு.க. பொதுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வாராம். மேலும் செல்வக்குமார் தனது இருசக்கர வாகனத்தை தி.மு.க. கொடிகளாலும், கருணாநிதி படங்களாலும் அலங்கரித்து வைத்துள்ளார். இதனிடையே கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு குறித்த தகவல் கேள்விப்பட்ட நாளில் இருந்து செல்வக்குமார் சரியாக சாப்பிடாமல் கவலையுடன் இருந்தாராம்.
மேலும் கருணாநிதிக்காக உயிரையே கொடுப்பேன் என பலமுறை கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற செல்வகுமார் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத் ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமாருக்கு, அருணாசல வடிவு என்ற மனைவியும், அழகுராஜா (25) என்ற மகனும், அன்னலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர்.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட வடக்கு செயலாளர் கி.வேணு தலைமைதாங்கி னார். அவைத்தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, தீர்மானக்குழு உறுப்பினர் சி.ஹெச்.சேகர், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமி குமரவேல், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் இளைஞர் அணி அமைப்பாளர் லோக்கேஷ், நகர செயலாளர் அப்துல் ரஷீத், நிர்வாகிகள் மோகன், சம்சுதீன், அப்துல்ரகீம், சிராஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்துக்கு பின்னர் தி.மு.க.வினர் தாலூக்கா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.#DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்