என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99052"
- 2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
- தந்தை வீட்டில் வசித்து வந்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலின் மனைவி சண்முகப்பிரியா (வயது 23). இவர்களுக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சண்முகபிரியா, தனது தந்தை செந்தில் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகப்பிரியா மற்றும் அவரது குழந்தைகளை காணவில்லை. இதனால் செந்தில், தனது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிந்து குழந்தைகளுடன் மாயமான சண்முகப்பிரியாவை தேடி வருகிறார்.
- கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்த பெண் குழந்தைகளுடன் மாயம்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
உடையார்பாளையம்,
வெண்மான்கொண்டான் நாச்சியார் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மனைவி சண்முகப்பிரியா (23). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சர்பேஸ்வரன் (4) சங்கமேஸ்வரன் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக சண்முகபிரியா அவரது தந்தை வீடான கீழ விளாங்குடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்த அவர் தனது குழந்தைகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை செந்தில் கயர்லாபாத் காவல நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான சண்முகப்பிரியாவை தேடி வருகிறார்.
- தொழிலாளி மாயமானார்.
- சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மாலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (32) இவர்களுக்கு நவீன் குமார் (13) என்ற மகனும் ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரேமா கோபித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார். பலமுறை பிரேமாவை சமாதானப்படுத்த முயன்றபோதும் அவர் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமேஷ் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ரமேஷின் தாய் சாந்தி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் நர்சிங் மாணவி மாயமானார்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
கரூர்:
திண்டுக்கல் மாவட்டம், குட்டைதாவரம் பட்டியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (வயது 52) விவசாயி. இவரது மகள் செல்சியா கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வருகிறார். கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் தங்கி நர்சிங் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற செல்சியா திரும்பி வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜான் பீட்டர் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார்.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சரவணன் (வயது24). இவரது மனைவி அப்சனா. இவர்கள் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளன.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அன்று சரவணன் தனது பாட்டி வீடான கோனேரிபள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு அவர் வரவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரதுமனவைி அப்சனா சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
- உறையூர் ராமலிங்க நகரில் 11-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயமானார்
- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி:
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 3-வது கிராஸ் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 17). இவர் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி பள்ளிக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் அருகே இளம்பெண்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கிலி, டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது22) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சங்கிலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் கற்பகலட்சுமி. இவரது மகன் கார்த்திகேயன். இவர் அங்குள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந் தேதி அன்று இவர் திடீரென மாயமானார்.
இதைத் தொடர்ந்து கற்பக லட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் கார்த்திகேயன் தனது காதலியை தேடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் கற்பக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரியங்கா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 23). நர்சிங் மாணவி. சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள்.
சாய்பாபா காலனி அருகே உள்ள கருணாநிதி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (18). இவர் பி.பி. வீதியில் உள்ள கவரிங்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் காயத்ரி (26). இவரது தாய் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் காயத்ரி தங்கி இருந்தார். சம்பவத்தன்று திடீரென அவர் மாயமாகி விட்டார். அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார்.
- மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்
- கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மாயம்
- போலீசில் தந்தை புகார்
கரூர்,
தரகம்பட்டி அடுத்த, இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மை நாயக்கர் (வயது 54). கூலித் தொழிலாளி. இவரது, 19 வயது மகள் அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றவர், மாலை நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகார்படி, சிந் தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.
- திருச்சியில் பல்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 6 பெண்கள் மாயமாகினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகாமுனி மகள் நந்தினி (வயது 18) .இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரை தான் திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் தன்னைத் தேடவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் மாலதி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கே.கே.நகர் பகுதியில் 18 வயது இளம் பெண் ஒருவர் மாயமானார். திருச்சி பர்மா காலனி கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மகள் தமிழ்ச்செல்வி (18 ). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அங்கேயே தங்கி இருந்த அவர் கடந்த 28-ந்தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிச் சென்றார். ஆனால் திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை.
இதுகுறித்து தாயார் புஷ்பம் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் ஒரு இளம் பெண் மாயமானார். ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் அபிநயா (23). இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து அபிநயா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் வைஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் தில்லை நகர் காவல் நிலைய பகுதியில் ஒரு சிறுமி மாயமானார். திருச்சி சங்கிலிகண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பானு என்கிற சமீம் பானு மாயகியுள்ளார். இவர் சமீப காலமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.
காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். பாலக்கரை ஆழ்வார் தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. அவரது மனைவி மகபூ நிஷா. இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாத கர்பிணியாக இருக்கும் மகபூ நிஷா அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அடுத்தடுத்து 6 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குளித்தலையில் பள்ளி மாணவன் மாயமானார்
- இது குறித்து, உறவினர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவரது உறவினர் மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 27ந் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக கூறியவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து, உறவினர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்