search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
    • நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்

    இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

    இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • பட்டாசு மீது அமர்ந்து இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி தருவதாக பந்தயம் காட்டியுள்ளனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சபரீஷ் (32) மற்றும் அவரது நண்பர்கள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

    அப்போது சக்திவாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

    எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சபரீஷ், ஆட்டோ ரிக்சா கிடைக்கும் என்ற ஆசையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் அதீத சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐஐடி தன்பாத் மாணவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இந்த வீடியோவை இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே சமயம் வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    இந்நிலையில், ஐஐடி தன்பாத் மாணவர்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் மாணவர்கள் பட்டாசை பற்ற வைத்து அதன் மேல் பெரிய பிளாஸ்டிக் குப்பை குப்பை தொட்டியால் மூடுகின்றனர். பட்டாசு வெடித்ததும் அந்த குப்பை தொட்டி 4 மாடி அளவிற்கு உயர பறந்து கீழே விழுகிறது.

    இந்த வீடியோவை இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    • காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ வைரலானது.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சண்டிகரில் ஓடும் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடித்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சண்டிகர் உட்பட வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
    • ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.

    • ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர். 

    • பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது.
    • வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவர், தெரு நாயின் வாலில் பட்டாசை கட்டி, அதை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
    • மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
    • ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதனை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டும் அதுபோன்று தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    எனவே பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கிணங்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகள், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக் கூடாது.

    தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112, ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

    கடந்த 2023-ம் ஆண்டு கனம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறிய பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ரெயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

    இதை மீறுபவர்கள் ரெயில்வே சட்டப்பரிவின் கீழ் கைது செய்து அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், ரெயில் பயணத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. மேலும் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
    • ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதாவது முதல் நாள் தமிழர்களும், 2-வது நாள் வடமாநிலத்தினரும், 3-வது, 4-வது, 5-வது நாள் ஆகிய 3 நாட்களும் கன்னடர்களும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதுபோல் இந்த ஆண்டு கர்நாடகத்தில் வருகிற 31-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் நவம்பர் 2-ந்தேதி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடிப்பதால் ஒலி, காற்று மாசு ஏற்படுவதாகவும் எனவே தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாடுகள் சரியான முடிவே என உத்தரவிட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரவு 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கர்நாடகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியான ஈஸ்வர் கன்ட்ரே தான் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு தீப ஒளியான தீபம் ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும். பட்டாசுக்கள் வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படும். அதனை தடுக்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். சில சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது கண்களில் காயங்கள் ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்படும் நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். இன்னும் பலர் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படுகிறது. எனவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    125 டெசிபல் குறைவான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள். தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூட உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நமது மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தியின் போது பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது, வியாபாரிகளிடம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும், அவற்றையே குடோன்களில் சேமித்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

    மேலும் அந்த விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு, அடுத்த முறை பட்டாசுகள் விற்கும் அனுமதி வழங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதே வழிமுறைகளை தற்போது தீபாவளி பண்டிகைக்கும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற வேண்டும்.

    தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகள் வெடிக்கும்படியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி அனைவரும் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    மந்திரி கூறியபடியே கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×