search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    • தேன் எடுக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி ஆணைப்படி, வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துப்பேட்டை சாமிநாதன் உத்தரவின்படி தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

    விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமை தாங்கினர். இதில் தேனீ பூச்சிகளோடு கலந்த பெட்டிகள் கூடுதலான பெட்டிகள், தேன் எடுக்கும் கருவிகள், மூலம் தேன் எடுக்கும் முறை பற்றியும் விவ சாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில் தென்னை, வாழை, மாமரங்கள், பழ மரங்கள் காய்கறி செடிகள், பூச்செடிகள் போன்றவைகள் இருப்பதன் மூலம் தேனிகளால் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதன் மூலம் அதிகமாக மகசூல் பெற முடிகிறது அதுமட்டுமின்றி தேன் அதிகளவில் பெறவும் ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் இதனால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    மேலும் விவசாயிகள் கூறுகையில்:-

    தேனீ வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கத்தின் போது இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இடும்பாவனம் கிராம விவசாயிகள் கூறினர்.

    • 7 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.

    தஞ்சாவூர்:

    காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

    மாநில பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் , மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மதிவாணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மது அலி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், மாதவன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர. மோகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டிலே குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

    உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.

    மேலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நேற்றைய தினம் டெல்டாவிலிருந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது.

    அதாவது வாக்குறுதி மட்டுமே கொடுத்துள்ளார்கள். ரத்து செய்வோம் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

    இதனை முழுமையாக நம்ப முடியாது. ஏனென்றால் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள எழுத்துப்பூர்வ மான வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

    அதுபோல் நிலக்கரி சுரங்கம் ரத்து என்கிற வாக்குறுதி ஆகி விடுமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் மத்திய பா.ஜ.க.வின் வாக்குறுதிகளை நம்ப மாட்டோம்.

    எனவே இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
    • கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பகுதிவேளாண் உதவி இயக்குனர் திலகவதி செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது,

    தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக மரபுசார் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 21- 22 ம் நிதி ஆண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    அதன்படி அறுபதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது என்பதால் இந்த மரபு சார் நெல் ரகங்களை திரட்டி பல மடங்காக பெருக்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 33 அரசு விதைப் பண்ணைகளில் 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

    இவ்வாறு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பு கவுனி, கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய ரகங்களில் கருப்பு கவுனி மற்றும் கருடன் சம்பா தலா 200 கிலோவும், மாப்பிள்ளை சம்பா 100 கிலோவும் மதுக்கூர் வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது.

    ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் மட்டுமே விவசாயிக்கு வழங்கப்பட உள்ளதுமதுக்கூர் வட்டாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் உடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 12.50 என்ற மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக அமைச்சர் அறிவுரைப்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின் அறிவுரைபடியும் பாரம்பரிய விதை நெல்கள் உற்பத்தி செய்யப்பட்டு உண்மை நிலை விதைகளாக மரபு சார் நெல் ரகங்கள் இனத்தூய்மையுடனும் விதை தரத்துடனும் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் மானிய விலையில் விதைகளை பெற்று மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே நமது மதுக்கூர் வட்டார விவசாயிகள் மேற்கண்ட பாரம்பரிய ரகங்களின் விதைகளை வாங்கி பயன்படுத்தி விதைகளை தங்களுக்கு என சேமித்து வைக்கவும் அரிசி ஆக்கி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

    மேற்கண்ட 3 பாரம்பரிய ரகங்களும் 500 கிலோ மட்டுமே வரப் பெற்றுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் இறுதியாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் 12 கோடி சிறு,குறு விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    மூன்று தவணைகளாக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் என்ற முதல் தவணையை 3.11 கோடி சிறு, குறு விவசாயிகள் பெற்று பலனடைந்துள்ளனர்.  2.75 விவசாயிகள் இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையில், இந்த உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது.

    இந்நிலையில், ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற புதிய அரசின் முதல் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியானது.
    காரிமங்கலம் பாலக்கோடு பகுதியில் பருவமழை குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாங்காய் மகசூல் குறைவால், விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரிமங்கலம்:

    பாலக்கோடு, காரிமங்கலம்,  அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம் பட்டி, ஜக்கசமுத்திரம், குண்டாங்காடு போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்கோவா, பெங்களுரா, செந்துரா, நீலம், பங்கன்பள்ளி, சக்கரைகுட்டி, பீத்தர் என 20-க்கும் மேற்பட்ட ரகங்களில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்காய் உள்ளூர் தேவைபோக வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாசெடிகளை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் 900 ரூபாய் கொடுத்து வாங்கி ஊற்றியும் போதிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் கிடைத்த மாங்காய் தற்போது 2 டன்னுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, அரசு மாங்காய் விவசாயிகளுக்கு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கனிமொழி எம்பி பிரசாரத்தில் பேசியுள்ளார். #kanimozi #dmk #parliamentelection
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை  திருச்செந்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திருச்செந்தூர் பேரூராட்சி கலையரங்கம் அருகில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் ஜீவாநகர், துர்க்கையம்மன் கோவில் தெரு, நாடார் தெரு, சண்முகர் மஹால் வழியாக சன்னதி தெரு, மறக்குடி தெரு, மணல்மேடு, சபாபதிபுரம் தெரு, புளியடி தெரு, வீரராகபுரம் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு, வீரகாளியம்மன் கோவில் தெரு வண்ணாந்திரவிளை, கரம்பவிளை, தோப்பூர் தெற்கு ரதவீதி, பாரதியார் தெரு, மேல நாடார் தெரு வழியாக வந்து தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  

    தி.மு.க. சொன்னதைதான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். மத்தியில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம். விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

    நாட்டில் நல்லாட்சி நடைபெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விவசாயிகளுக்கு ரூ.8000 நிதி உதவி வழங்கப்படும் என்று பவன் கல்யாண் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PawanKalyan #LokSabhaElections2019

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் 175 சட்ட சபை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இங்கு தெலுங்கு தேசம்- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சி, கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    நடிகர் பவன்கல்யாண் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார்.


    இந்த நிலையில் பவன் கல்யாண் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளும், இலவச திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

    அதன்படி பெண்களுக்கு சகோதரர்களின் சீதனம் போல் ஆண்டுக்கு 2 சேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8000 நிதி உதவி வழங்கப்படும்.

    58 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ5000 சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.

    முதுநிலை படிப்புவரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்கப்படும். இளநிலை கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முதல் ஆண்டுக்கான தேர்வு கட்ட ணத்தை அரசே வழங்கும்.

    மேற்கண்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. #PawanKalyan #LokSabhaElections2019

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    சென்னை:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணியின்(அ.தி.மு.க. கூட்டணி) வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

    பதில்: எங்கள் கூட்டணி மக்களை சார்ந்த கூட்டணி. இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கின்ற தேர்தல். தி.மு.க. கூட்டணியில் அனைவரும் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பெரிய கோடீஸ்வரர்களுக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கூட்டணியில் எல்லாமே விவசாயிகளின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் அணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால், எதிரணியில் தி.மு.க.வுக்கு மட்டும் தான் வாக்கு வங்கி உள்ளது. மற்ற எந்த கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. எனவே, வாக்கு வங்கியும், மக்களின் ஆதரவும் உள்ள எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    கேள்வி:- 18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்? அ.தி.மு.க. ஆட்சி தப்புமா?

    பதில்:- தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் 40 பாராளுமன்ற தொகுதி மட்டும் அல்ல, 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் முழுமையாக வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. நிச்சயமாக ஆட்சியை தக்க வைக்கும். அதில் சந்தேகம் இல்லை.

    கேள்வி:- பாராளுமன்றம் கூடிய நாட்களில் உங்களது வருகை 45 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறதே?

    பதில்:- கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எத்தனை முறை சட்டமன்றம் சென்றார்? ஒரு வருடத்துக்கு ஒருமுறை சென்ற அவர் மீது யாராவது குறை சொல்லி இருக்கிறார்களா? அவர் ஒரு கட்சியின் தலைவர் அவருக்கு எல்லா வேலைகளும் இருக்கும். நானும் தர்மபுரியில் இருந்தேன். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன்.

    வருகைப்பதிவுக்கும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? 100 சதவீதம் வருகைப்பதிவு வைத்துள்ள மற்ற தொகுதி எம்.பி.க்கள் தர்மபுரியில் செய்யப்பட்டுள்ள அளவுக்கு திட்டங்கள் செய்து இருப்பார்களா? பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, 100-க்கு 70 நாட்கள் சபை ஒத்தி வைப்பு நடக்கும். எனவே, அங்கு போய் சும்மா கையெழுத்து போட்டு, டெல்லியில் உட்காருவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், இங்கு வந்து வேலைகளை செய்தேன்.

    கேள்வி:- சமீபத்தில் வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த உங்கள் கருத்து என்ன?

    பதில்:- காங்கிரஸ் கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறுகிறார்கள். இதற்கு 3 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். எங்கே இருந்து நிதி எடுப்பார்கள்? நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை. ராகுல்காந்தி கூறுகிறார் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வுக்கு பதில் வேறு பெயரில் நுழைவு தேர்வு இருக்கும் என்கிறார். மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார். இது முரண்பாடான கருத்தாகும்.

    கேள்வி:-அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைக்க பெரிய அளவில் பேரம் பேசப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே?

    பதில்:- தி.மு.க. எப்போதும் கையாளும் ஒரு பொய் இது. கடந்த தேர்தலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெரிய அளவில் பேரம்பேசி பணம் வாங்கினார் என்று குற்றம்சாட்டிய தி.மு.க. இப்போது வைகோவை கூட்டணியில் சேர்த்து இருக்கிறது. விஜயகாந்த் மீதும் அதேபோன்று குற்றம் சாட்டினார்கள். இப்போது விஜயகாந்துடனும் கூட்டணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்கள். திருமாவளவனும் கடந்த தேர்தலில் பணம் பெற்றார் என்று குற்றச்சாட்டு வைத்தனர். இப்போது, அவரும் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார். தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் நல்ல கட்சி. அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்றால் பணம் வாங்கிவிட்டார்கள், மோசமான கட்சி என்று கூறுவது ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

    கேள்வி:- நீங்கள் மத்திய மந்திரியாக இருக்கும் போது கொண்டு வந்த முத்தான 3 திட்டங்கள் என்ன?

    பதில்:- 108 ஆம்புலன்சு திட்டம். இந்தியாவில் 22 மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் ஆம்புலன்சுகள் ஓடுகின்றன. கோடிக்கணக்கான உயிரை காப்பாற்றிய திட்டம் இது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் குழந்தைகள் 108 ஆம்புலன்சில் பிறந்துள்ளன. இதனை எனது மிகப்பெரிய திட்டமாக நான் பார்க்கிறேன். அடுத்து தேசிய கிராமப்புற சுகாதார திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தாய் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, குழந்தை இறப்பு விகிதம் 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் நேரில் எனக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். அடுத்து பொது இடங்களில் புகையிலை பிடிக்க கூடாது. புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் காரணமாக கோடிக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.




    கேள்வி:- வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துகள் தொடர்பாக பா.ம.க. மீது தொடர்ந்து மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறாரே?

    பதில்:- சொத்துகளை அபகரிப்பது தி.மு.க.வின் குலத்தொழில். எங்கள் வேலை அதுவல்ல. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் சொத்துகளை அபகரித்து சிறைக்கு சென்றதை நாம் பார்த்தோம். நாங்கள் எடுக்கிறவர்கள் அல்ல, கொடுக்கிறவர்கள். இது போன்ற ஒரு பொய்யை மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தால் தொடர்ந்து எங்களை பற்றி, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பற்றி தனிநபர் விமர்சனம் மோசமான வார்த்தைகள் பேசி வருகிறார்கள்.

    நான் மு.க.ஸ்டாலினிடம் கேட்கிறேன். நாங்கள் எந்த விசாரணைக்கும் தயார். எங்கள் சொத்து பட்டியலை கொடுக்கிறேன். விசாரணை குழு, கோர்ட்டு விசாரணை, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ. விசாரணை எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என் பெயரிலோ, எங்கள் அம்மா, அப்பா பெயரிலோ, குடும்பத்தில் ஒருவர் பெயரிலே ஒரு சதுர அடி நிலமாவது வன்னியரின் சொத்தை நாங்கள் அபகரித்து உள்ளோம் என்று நிரூபித்தால், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுகிறேன். அப்படி, உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உங்கள் கட்சியில் நிறையபேர் அதை எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

    திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடக்கம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

    திண்டுக்கல் அருகே நத்தம் செங்குறிச்சி, வேம்பார்பட்டி, சாணார் பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழைப் பொழிவு இல்லாததால் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து மா விவசாயம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து திண்டுக்கல், காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் மழைப் பொழிவு குறைவாக இருந்ததால் மாம்பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் வரத்து குறைந்துள்ளது. ஆனால் முதல் தரமான செந்தூரம் ஓரளவு தாக்குபிடித்து வரத்து அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் செந்தூரம் மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மாம்பழங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வறட்சி மற்றும் கஜா புயலால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் ஓரளவு இருந்த போதும் விலை குறைவாகவே கேட்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஒரு கிலோ மாம்பழம் தரத்துக்கேற்ப ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை விற்பனை செய்து வருகின்றனர். கோடை காலத்தில் பொதுமக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு அய்யலூர் சந்தையில் தக்காளி விலை ஓரளவு உயர்ந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தக்காளிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடுமையாக வீழ்ந்து காணப்பட்டது. 16 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரையே விற்பனையானது. மேலும் வியாபாரிகளும் குறைந்தஅளவே வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    தற்போது தேவை அதிகரித்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது.

    16 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விலைகேட்கப்படுகிறது. மேலும் வெளியூர்களிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஓரளவு விலை உயர்ந்து தக்காளிகளும் விரைவில் விற்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். கோடை காலத்தில் தக்காளி தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, மூலச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாச்சி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை, பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏப்ரல், மே காலங்களில் பாச்சலூர், வடகாடு, பெத்தேல்புரம், பால்கடை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து நாட்டுத்தக்காளி அதிகளவில் வரத்து இருக்கும். இந்த தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50க்கே விற்பனையானது. விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வழக்கமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 10ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக 1000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஜூன் மாதத்தில் பெங்களூர் பகுதியில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த தக்காளிகள் நாட்டுத்தக்காளி போல் சுவை இருப்பதில்லை. இருந்தபோதும் விலை 14 கிலோ பெட்டிக்கு ரூ.400 வரை விற்பனையானது.

    எனவே வரும் காலங்களில் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்தால் நல்ல விளைச்சல் பார்க்கலாம் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    கொடைக்கானல் மேல்மலையில் புலி தாக்கி அடுத்தடுத்து 5 மாடுகள் பலியான சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் வனப்பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    வனத்துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய்து வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கூக்கால் வனப்பகுதியில் 4 காளை மாடு மற்றும் ஒரு பசு மாடு என 5 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாடுகளின் உடலில் வன விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருப்பதால் புலி தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.இதனையடுத்து வன அதிகாரி பழனிக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர் தங்கராஜ் தலைமையில் இன்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே புலி தாக்கித்தான் இறந்ததா? அல்லது வேறு வன விலங்குகள் கடித்ததா? என தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    ×