search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • பெரியமணக்குடியில் வடிகால் கட்டுமான பொருட்கள் சேதமடைந்துள்ளது
    • இது குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமணக்குடி கிராமத்தில், வடிக்கால் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், பெரிய மணக்குடி கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து கழிவுநீர் வடிக்கால் கட்டுவதற்காக, தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தூண்டுதலின் பேரில், சிலர் கட்டுமானப் பொருள்களை சேதப்படுத்தினர். இதனால் வடிக்கால் கட்டுமானப் பணி தடைபட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அதிக வயது முதிர்ந்தோர் களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமரு மிடத்திற்குச் சென்று, மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி னார்கள்.

    இக்கூட்டத்தில், காரியா பட்டி வட்டம், வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொ.மாயகிருஷ்ணன் என்பவரின் வாரிசு தாரர்களான அழகம்மாள், ராமமூர்த்தி மற்றும் கற்பகவள்ளி ஆகியோர்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.
    • அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா ஜெல்மாரம்பட்டியில் 5 குடும்பங்களை சேர்ந்த மாதப்பன், பச்சமுத்து, முனியப்பன் மணிவண்ணன், சம்பத், ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 29.5.2023 லவ் இருந்து 31.5.2023 வரை எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

    அந்த திருவிழாவில் மேற்கண்ட எங்கள் 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.

    இதனால் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எங்கள் 5 குடும்பங்களும் கலந்து கொள்ளாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுவரை ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. திருவிழாவின் கடைசி நாள் அன்று இரவு நிகழ்ச்சிக்கு சென்ற எங்களை பஞ்சாயத்து தலைவரின் ஆட்கள் சிலர் மது போதையில் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

    20 குடும்பங்கள் பயன்படுத்தும் சி.சி. ரோடை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அதை தட்டிக் கேட்டதற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், அதனால் நீங்கள் அனைவரும் அபராதமாக 40,000 ரூபாய் கிராமத்திற்கு கட்ட வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

    அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.

    இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் அமைதியையும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் இனி வரும் காலங்களில் நாங்கள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் பரம்பரையாக ஒன்றாக கூடி திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த மாதம் கலெக்டர் சங்கீதாவி–டம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்க–ளுக்கு சொந்தமான மயா–னம் செக்கானூரணி-திரு–மங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட் டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் பாரம்பரிய பழக்க வழக்கங் கள் மறையும் நிலை ஏற்ப–டும். மேலும் பல்வேறு பகுதி மக்கள் மின்மயா னத்தை பயன்படுத்தினால் சுற்றுச்சூ–ழல் மாசுபாடு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று புகார் எழுந்தது. இது குறித்து கடந்த மாதம் கலெக்டர் சங்கீதாவி–டம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்த–னர்.

    இந்த நிலையில் செக்கா–னூரணி பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேவர் சிலை அருகில் கிராம பொதுமக்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    • ஓமன் நாட்டு சிறையில் வாடும் கணவரை மீட்டு தரவேண்டும்.
    • கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரசிங்கம். இவரது மனைவி கண்மணி. இவர் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனி டம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வீரசிங்கம் (வயது39). ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அரபு முதலாளியிடம் 6 மாத வேலை செய்தார். அவர் எனது கணவருக்கு சம்பளமும் எதுவும் கொடுக்காததால் நாங்கள் இந்தியாவில் இருந்து பணம் அனுப்பி அவர் சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்தோம்.

    தொடர்ந்து எனது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத் தில் ஓமன் நாட்டில் மீன்பிடி வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 12-ந்தேதி ஓமன் நாட்டில் இருந்து விடுமுறைக்காக இந்தியா புறப்பட்டார்.

    அப்போது எனது கண வரின் முன்னாள் முதலாளி கொடுத்த புகாரின்பேரில் ஓமன் ஏர்போர்ட்டில் ஓமன் போலீசார் அவரை கைது செய்ததாக ஊர் திரும்பிய அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தற்ேபாது வேலை பார்க்கும் முதலாளியை தொடர்பு கொண்டோம். அவரும் எனது கணவரை சிறையில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் கணவரை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை மீண்டும் தொடர்பு கொண்ட போது அலட்சியமாக பதில் அளித்தார்.

    எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை இந்தியா மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
    • முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது.

    அரியலூர்:

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களை பெற்று விசாரித்தார். மேலும் அவர் மனுதாரர்களின் குறைகளை கேட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 397 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 397 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக "நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இடிக்கப்பட்ட கோவில்களும் மீண்டும் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.
    • பாளையங்கால்வாயில் துவைத்த துணிகளை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், பிரம்ம நாயகம் மற்றும் பலர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்ட போது அங்கு இருந்த 2 விநாயகர் கோவில்களும் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.

    இதனை மீண்டும் கட்டித்தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை கட்டப்படவில்லை. அதனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நிர்வாகி ஒருவர் துதிக்கையுடன் கூடிய விநாயகர் வேடத்தில் வந்திருந்தார்.

    தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சிராஜ் என்ற சமூக ஆர்வலர் பாளையங்கால் வாயை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தார். முன்னதாக அவர் 10,15 வருடங்களுக்கு முன்பாக இருந்த பாளையங்கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வாறு தங்களது உடைமைகளையும், தங்களையும் அந்த கால்வாயின் நீரினால் தூய்மைப்படுத்தி கொண்டார்களோ, அதனைப் போன்றே பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் துணிகளை துவைத்து, அந்த துணிகளின் நிலையை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார். தொடர்ந்து அவர் பாளையங்கால்வாயை சுத்தப்படுத்திடவும், நெல்லையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மிக விரைந்து நடத்தி முடித்திட வேண்டியும் மனு அளித்தார்.

    • அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் பெறப்பட கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    மங்கலம்:

    சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியின் 5 -வது வார்டு உறுப்பினரும் தி.மு.க. நகரச் செயலாளருமான வேலுசாமி, வா- அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. மூத்த நிர்வாகி பறையாகாடு மணி, கந்தசாமி, உதயக்குமார், ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், காளிபாளையம் 9-வது வார்டு மகாலட்சுமி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மனு வாங்கும் முகாம் நடந்தது.
    • இன்று வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடை பெறுகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடந்தது. விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கி கிராம பொது மக்க ளிடம் 68 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முத்துமணி, துணைத்தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் பால் பாண்டி, பி.எல்.ஓ. அமைப் பாளர் ஜெயபாண்டி அம்மாள், வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் முதலைக் குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றதலைவர் பூங்கொடி பாண்டி கிராம பொதுமக்களிடம் 77 மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

    துணைத்தலைவர் ரேவதி பெரியகருப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம உதவியாளர் பிரபு, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சிராணி சுப்பிரமணி யன் நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று கிராம பொது மக்களிடம் 11 மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் வெள்ளையம்மாள், ஊராட்சி செயலாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பானாமூப்பன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தலைவர் மகாராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கிராம பொது மக்களிடம் 15 மணுக்கள் பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் ஆறுமு கம், ஊராட்சி செயலாளர் பாண்டி, வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    எரவார்பட்டி ஊராட்சியில் தலைவர் பாண்டி, துணைத்தலைவர் செந்தா மரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி ஆகியோர் கிராம பொதுமக்களிடம் 27 மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு முகாம்களில் செல்லம்பட்டி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனி யப்பன் ஆய்வு செய்தார். இன்று வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடை பெறுகிறது.

    • கிராம மக்கள் பலமுறைபோக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
    • மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளம் திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஆறுமுத்தாம்பளையம் ஊராட்சியில் அறிவொளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உரிய பஸ் வசதியில்லை .இது குறித்து போக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும். அதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புற பகுதிகளில் பஸ் வசதி இல்லை. அதனால் நகரப் பகுதிகளுக்கு அன்றாடப் பணிகளுக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வர முடியாமல் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.

    மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும். அவினாசி தாலுகாவில் உள்ள கானூர் ஊராட்சியில், சின்ன கானூர், பெரிய கானூர் பகுதியில் இயங்கும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்வது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். அதனை முறைப்படுத்தி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

    ஊத்துக்குளி ஏ. பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லக்கட்டிப்பாளையம் பகுதியில் சரியான முறையில் பஸ் இயக்கப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
    • பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை எழுதி தருகின்றனர். இந்த மனுவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வாங்குகின்றனர். சிலர் பொதுமக்களுடைய பணி வேலைகளை செய்து தருவதாக கூறி அதிக பணம் பெற்று விடுகின்றனர்.

    இவர்கள் மத்தியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 76) என்பவர் திருப்பூரில் தங்கி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    தனக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையினர் மனு எழுத பேப்பர்களை இலவசமாக தருவதாகவும் மனு எழுத வருபவர்கள் தேநீர் அருந்த ரூ.10, ரூ.20 வலுக்கட்டாயமாக தருவதாக கூறுகிறார். இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சண்முகவேலின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ×