search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்.
    • சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சா் சக்கரபாணியிடம் வலியுறுத்தியுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக, டெல்லி சென்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் கைலாஷ் செளத்ரியை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து மனு அளித்தோம்.

    அப்போது அவா், சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்கி அரை லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினாா். அமைச்சரின் இந்த பதில் தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றாா்.

    கட்சி சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக திருப்பூா் மாவட்டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31 வரை தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த மாதம் சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்கிடையே 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி கூறியுள்ளாா். அமைச்சரின் இந்த அறிவிப்பை வெறும் கண் துடைப்பாகவே கருதுகிறோம்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக ரூ.30க்கு ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றாா்.

    • மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை அநாகரிகமான முறையில் பேசி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • அவதூறாக பேசியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரை பற்றி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் அநாகரிக மான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அப்போது தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், செங்கோட்டை ரஹீம், தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    • அரியலூர் சிங்காரத்தெருவிலுள்ள குட்டையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் த.தண்டபாணி கோரிக்கை மனு

    அரியலூர்,

    அரியலூர் சிங்காரத்தெருவில் உள்ள குட்டையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் த.தண்டபாணி கோரிக்கை மனு அளித்தார்.

    அவர் அளித்த மனுவில், அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிங்காரத்தெருவில் (வார்டு எண் 10) நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டை தற்போது நெய்வேலி காட்டாமணக்கு சூழ்ந்து புதர்காடாக காட்சியளிக்கிறது. இங்கு விஷ பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. அவை இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனே வசித்து வருகிள்றனர். எனவே, அந்த குட்டையை சீரமைத்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • கூட்டமானது நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.

    எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகாலனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்த ம்மாள்நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜிசாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப் பாளையம் சாலை, சிங்கபெ ருமாள் கோவில், ஜெபமாலை புரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்க லைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்து க்கான்பட்டி, நட்சத்தி ராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.
    • வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி கருங்குழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் மனு அளிக்க வந்தனர்.  100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வேலையில் அமர்த்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். மேலும் ராஜேந்திரன் சில்வர் பாத்திரம் மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மேலும் வேலை அட்டை பதிவு செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த வேலை திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    • கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 25.8.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் கூட்டத்தில் அமைக்கப்படும். வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • தற்போது உள்ள பள்ளி முதல்வர் பாகுபாடு பார்த்து செயல்படுவதாக வும், ஆசிரியைகளை பழிவாங்குவதாகவும், கூறப்படுகிறது.
    • விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கு வழங்கிய நிதியில் ரூ. 1 கோடி அளவில் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தினுள் செயல்பட்டு வரும் ஆங்கில பள்ளியானது, சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட 40 வருட பழமையான பள்ளியாகும்.

    நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த இப்பள்ளியானது சமீப காலமாக கல்வி தரம் குறைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இப்படியே சென்றால் பள்ளியை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது உள்ள பள்ளி முதல்வர் பாகுபாடு பார்த்து செயல்படுவதாகவும், ஆசிரியைகளை பழிவாங்குவதாகவும், கூறப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கு வழங்கிய நிதியில் ரூ. 1 கோடி அளவில் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    எனவே உடனடியாக பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்துவிட்டு அதே பள்ளியில் பணிபுரியும் அனுபவமும், தகுதியும் வாய்ந்த ஒருவரை பள்ளி முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கரும்பு அலுவலர் மற்றும் பள்ளி தாளாளர் கதிரவரனிடம் புகார் அளித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
    • பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

    நெல்லை:

    தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தமிழக அரசு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு நெல்லை விதை ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. இங்குள்ள அமிர்தம்மாள் உயர்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் பணி நிமித்தமாக மதுரை சாலைக்கு வந்து தான் பஸ் ஏறவேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே தண்டவாளம் குறுக்காக உள்ளது. இந்த வழித்தடம் வழியாக சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்கின்றன. இதனால் பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அமிர்தம்மாள் பள்ளி அருகில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுத்தால் கரையிருப்பு, குறிச்சிகுளம், சுந்தராபுரம், செட்டிகுளம் கிராம மக்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • இந்த திருவிழாவின் போது சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் பொறுத்தப்படும்‌.
    • இதனை பொறுத்துக்கொள்ளாத மாற்று சமூகத்தினர் சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் போடக்கூடாது என மிரட்டி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், மங்களக் கொட்டாய் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வே.முத்தம்பட்டி ஊராட்சிக்குபட்டது. மங்களக்கொட்டாய் காலனி. இங்கு 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இங்கு வருடத்திற்கு ஒரு முறை கோவில் திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த திருவிழாவின் போது சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் பொறுத்தப்படும்.

    இதனை பொறுத்துக்கொள்ளாத மாற்று சமூகத்தினர் சாலையில் வண்ண அலங்கார விளக்குகள் போடக்கூடாது என மிரட்டி வருகின்றனர்.

    எனவே மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • மதுரை வீரன் கோவில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை கலெக்ட ரிடம் வழங்கினர். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:- எங்கள் ஊர் மக்களின் குலதெய்வமான மதுரை வீரன் சுவாமி தங்க தேரினை எங்கள் ஊரில் உள்ள எங்கள் கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட உள்ளோம்.

    இதற்கான வாகன வசதி மற்றும் இதர வசதிகளை ஆற்றல் அற க்கட்டளையினர் செய்து தர முன்வந்துள்ளார்கள். ஆகையால் மதுரை வீரன் தேரானது பாதுகாப்பாக முழுவதும் மூடி வைக்க ப்பட்ட வாகனத்தில் எடுத்து வந்து எங்கள் ஊரில் வைத்து பூஜை செய்து வழிபட இருக்கிறோம். வழிபாடு முடிந்தவுடன் அதே வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்க உள்ளோம். எங்கள் ஊரில் எந்த பிரதான சாலையும் கிடை யாது. எங்கள் ஊரானது கிராமப் பகுதிகளின் உட்பகுதியில் உள்ள ஊராகும். எனவே பொது மக்களுக்கு எவ்விதமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வராது என்று உறுதியளிக்கிறோம். இந்த மதுரவீரன் கோவில் ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்ட த்திற்கு உட்பட்ட 32 பஞ்சா யத்துகளில் உள்ள எங்கள் ஊர் மக்களின் குல தெய்வமாக உள்ளது. ஆகையால் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.            

    • தா.பழூர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • மறியலில் ஈடுபட்ட பெண்களை தாக்கியதாக எஸ்.பி.யிடம் புகார் மனு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பேருந்து வசதி கேட்டு அமைதியான முறையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், காவல் நீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவர் இரா.உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி டி.தண்டபானி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு செல்வதற்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் முத்துவாஞ்சேரி, காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அறங்கோட்டை, அருள்மொழி உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, பள்ளி}கல்லூரி என அனைத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் மேற்கண்ட நேரங்களில் இயங்க வேண்டிய பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த 7 ஆம் தேதி தா.பழூர் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட சித்திரவேல் மனைவி விஜபபாரதி, சிங்குராஜ் மனைவி சாந்தி, தமிழ்மணி மனைவி சாவித்திரி உள்ளிட்டோரை, தா.பழூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் கண்ணத்தில் அறைந்தது மட்டுமல்லாமல், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதே போல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி ஆகியோரும் பெண்களை தரக்குறைவான வார்த்தையால் திட்டி 10}க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.எனவே, காவல்துறையின் கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி மற்றும் பெயர் தெரியாத காவலர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×