search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று"

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    கடலூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    • 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
    • சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.

    திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி ஊராட்சி சின்ன ராமேஸ்வரம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2500 மரக் கன்றுகள் நடப்பட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 20 வகையான மர கன்றுகள் நட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலை வர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, சாலை ஆய்வாளர்கள் பாஸ்கர், பாண்டி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்

    கீரனூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீரனூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம், ஆசிரியர்கள் ரமேஷ், பாலகுமார், கபிரியேல், சோலைமுத்து மற்றும் மரமடக்கி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும்் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
    • கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகளை வழங்கினர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருமயம் தொகுதி துணை தலைவர் எம்.அக்பர் அலி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நகர பொருளாளர் எஸ்.அமீர் ஹம்ஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் நகர ஒருங்கிணைப்பாளர் இப்ராஹீம், நகரதலைவர்ஷேக் முகம்மது, நகர செயலாளர் ஆரிப், கிளை பொருளாளர் நூருல் அமீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் கலெக்டர் மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினார்
    • தன்னார்வ அமைப்பின் உதவியுடன் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு 130 ஹெக்டர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதிய பயணம் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் கொய்யா மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் துணி பைகளும் வழங்கப்பட்டது.

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

    வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    திருநாகேஸ்வரம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் தஞ்சாவூர் நெடுஞ்சாலை த்துறை கோட்டம், கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் செந்தில்தம்பி, பிலீப் பிரபாகர், உதவி பொறியாளர்கள் இளவரசன், கந்தன் மற்றும் கும்பகோணம் மத்திய ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் ஜேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    அரியலூர்,

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 5,00,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும் என ஆக மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக செந்துறை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் செந்துறை சாலை துவங்கி ஜெயங்கொண்டம் சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரக்கூடிய அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், ஆலம் ஆகிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து, மரக்கன்றுகளை முறையாக பராமரித்திடவும், இதேபோல் அரியலூர் முதல் செந்துறை வரை உள்ள சாலையில் பணிகள் முடிந்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
    • சாலையோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே காவாலம்பாடி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த யொட்டி 3000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியம் தலைமை வகித்தார்.

    சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சீர்காழி ஆனந்தி, மயிலாடுதுறை இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் சசிகலா தேவி வரவேற்றார்.

    இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துக் கூண்டு வைத்தார்.

    தொடர்ந்து சாலை ஓரம் 3000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சித் துணைத் தலைவர் சுதாகர் மற்றும் கட்சி பிரமுகர்கள் முத்தமிழ், பன்னீர்செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராம் மரக்கன்றுகளை நட்டார். உடன் பரமக்குடி உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன், பரமக்குடி உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை திருமங்கலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. திருமங்கலம் சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் லாவண்யா, இளநிலை பொறியாளர் சுந்தரவடிவேல், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×