search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக் கூட்டம்"

    • உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
    • கலெக்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சனைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.

    இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பூர்வாங்க ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும் கூட்டுறவு வார விழா தலைவருமான ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் என்ற முதன்மை மையக் கருப்பொருளை மையமாகக் கொண்டு வருகிற 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நாட்களும் கூட்டுறவுக் கொடியை ஏற்றி கூட்டுறவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் விழா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பாளையத்தில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த காலகாலே ஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
    • இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    சரவணம்பட்டி,

    கோவை கோவில்பாளை யத்தில் சுமார் 1000 ஆண்டு பழமைவாய்ந்த புராண வரலாற்று சிறப்புமிக்க காலகாலே ஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

    இங்குள்ள சிவலிங்கம் எமதர்மராஜன் சாபவி மோசனம் பெறுவ தற்காக கவுசிகா நதிக்கரையில் எமதர்மராஜன் நுரையும் மணலுமாய் சேர்ந்து செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமான குரு பகவானாக அமைந்துள்ளார். இந்த கோவில் குரு பரிகார ஸ்தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகும் விளங்குகிறது.

    இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் குட்பட்டும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பாதுகாக்கப்பட்டு, பராம ரிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    அதன்பின்பு திருப்ப ணிகள் நடைபெற வில்லை. இதனால் இக்கோவிலில் திருப்பணிகள் நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவிலில் திருப்பணிக்கான ஆலோசனைக் கூட்டம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுரு சுவாமிகள் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வன் முன்னிலை வைத்தார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் காலகாலேஸ்வரர் முன் கல்பிரகாரம் மண்டபம் கட்டுதல், விமானங்களுக்கு வர்ணம் பூசுதல், திருக்கோவிலை சுற்றிலும் தரைத்தளம் அமைத்தல், புதிதாக மடப்பள்ளி, அன்னதான சமையல் கூடம்,திருக்கோயில் அலுவலகம், நால்வர் சன்னதி உள்ளிட்ட 17 பணிகளு க்கான ஆலோசனைகள் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. நாகராஜ், எஸ் .எஸ். குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ்குமார், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் மணி என்ற விஜயகுமார், மற்றும் சுப்பையன், சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வாணியம்பாடியில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் வாணியம்பாடிக்கு வருகை தந்தார்.

    அவரை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் பிரபாகரன், செயலாளர்கள் டாக்டர் தே.செந்தில்குமார், டாக்டர் எஸ் பசுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    அதன் பின்னர் மாநில அளவிலான அரசு மருத்துவர்கள் சங்க பணிகள், மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். சிவசுப்பிரமணிக்கு பொன்னாடை அணிவித்து மாநில தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரசு டாக்டர்கள். டேவிட் விமல் குமார், பார்த்திபன், நேதாஜி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடந்தது
    • நிர்வாகிகள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசு டாக்டர்கள் சங்க தலைவரும் இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் பி.பிரபாகர் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கே. டி. சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். டாக்டர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில், இந்திய மருத்துவ சங்க தலைவர் என்ஆர்டிஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில், ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் கலிவரதன், இந்திய மருத்துவர் சங்க திருப்பத்தூர் கிளை செயலாளர் டாக்டர் வினோதினி, உட்பட அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வருகின்ற 13, 14-ந் தேதிகளில் நடைபெறுகின்ற திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.

    இதனை முன்னிட்டு செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவல கத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டக் நிர்வாகிகள், சார்புஅணி செயலாளர்கள் நகர, ஒன்றிய நிர்வாகிகள், , வட்டக் செயலாளர்கள், நகரச் சார்பணி செயலாளர்கள், , முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • எம்.ஜி.ஆர். 106 வது பிறந்தநாள் விழாவை தருமபுரி நகரில் 33 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர அவை தலைவர் அம்மா வடிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, மலர்விழி, நகர பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஆர். வெற்றிவேல் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 106 வது பிறந்தநாள் விழாவை தருமபுரி நகரில் 33 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, விழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றுவது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
    • சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    • மத போர்வையில் ஆலய விழாக்களில் அரசியல் மாநாடு நடத்துகிற அநாகரீக போக்கை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • பா.ஜ.க., ஆலய வளாகத்துக்குள் மதமாநாடு என்ற போர்வையில் அர சியல் மாநாடு நடத்துவதை கைவிட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் உதய தினவிழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அய்யா வைகு ண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.ராஜன், ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சத்தியசேகர், பால்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாசி 20-ந் தேதி அய்யா வைகுண்டசாமி உதய தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும், இதையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    தொடர்ந்து குரு. பால ஜனாதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலய திருவிழாக்களைப் பொருத்தவரை மாநாடு என்ற பெயரில் அரசியல் பேசுவது அவசியமற்றது. மத விரோதமானது. சில அமைப்புகள் ஆலய வளாக த்துக்குள் மாநாடு நடத்து வதற்கு சில சூழ்நிலைகளில் அனுமதி அளித்திருக்கலாம். அந்த மாநாடுகள் அந்த மதங்களின் பெருமைகளைப் பற்றி பேசுவதாக அமைந்து இருக்கிறது.

    ஆனால் அண்மை கால மாக மத போர்வையில் ஆலய விழாக்களில் அரசி யல் மாநாடு நடத்துகிற அநாகரீக போக்கை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    மண்டைக்காட்டில் 80 ஆண்டுகளுக்கு மேலாக மாநாடு நடத்தியுள்ளோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது அங்கு நடைபெறும் மாநாடு மதம் போதிக்கும் ஆன்மீக மாநாடாக நடத்தப்படாமல் மத வெறுப்பை எடுத்துச் சொல்லுகிற பா.ஜ.க. வின் பொதுக்கூட்டம் போன்று நடத்துவது கண்டிக்கத் தக்கது.

    இந்த பிரச்சினையில் அறநிலையத் துறையின் முடிவு நியாயமானதாக உள்ளது. மத நம்பிக்கையை பாது காப்பதாகவும் அமை கிறது. குமரி மாவட்டத்தில் இந்து ஆலயத்தின் திருப்பணி களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மாநில அரசு ரூ. 100 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அரசின் மக்கள் நல திட்டங்களை அரசியல் களத்தில் சந்திக்க முடி யாத பா.ஜ.க., ஆலய வளா கத்துக்குள் மதமாநாடு என்ற போர்வையில் அர சியல் மாநாடு நடத்து வதை கைவிட வேண்டும். மேலும், அரசின் முடிவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • ஆஷா பணியாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீடு தொகையினை திரும்ப வழங்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சங்க ஒன்றியத் தலைவர் உத்ரா தலைமையில் அரூரில் நடைபெற்றது.

    இதில் ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆஷா பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆஷா பணியாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீடு தொகையினை திரும்ப வழங்க வேண்டும்.

    அரசு சார்பில் ஆஷா பணியாளர்களுக்கு சீருடைகள், காலணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், சங்க மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட பொதுச் செயலர் கே.மணி, கவிஞர் ரவீந்திரபாரதி, சங்க நிர்வாகிகள் ராதா, கிருஷ்ணவேணி, சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
    • மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடக்க உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் சேவை சங்கங்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புக்கள், அரசுத்துறை அலுவலர்க–ளுடன் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உங்களை சார்ந்த குடும்பங்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வசிப்பு திறன் மேன்படுத்தும் ஒன்றாக இந்த புத்தக திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புத்தக திருவிழாவில் உள்ளுர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழா வெற்றி பெற பங்கெடுத்து கொள்ள வேண்டும்.

    எதிர்கால சங்கதிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக திருவிழா அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒவ்வொருவரும் தன்முனைப்போடும், அர்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புத்தக திருவிழா லோகோவினை மாவட்ட கலெக்டர்.சாருஸ்ரீ வெளியிட்டார். இவ்ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தமிழ் சங்கம், விவசாயிகள் சங்கம், கல்லூரி முதல்வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களின் பிரிதிநிதிகள், மற்றும் வர்த்தக சங்கம், அனைத்து தரப்பு பிரிதிநிதிகள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×