என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tobacco products"
- போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல்.
பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிம்னற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குட்கா பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 78 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த 78 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
- கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை போலீசார் நேற்றிரவு உடையாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றனர்.
அப்போது காருக்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் தப்பியோட முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த லெட்சமணன் (19) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குஜராத் பதிவெண் கொண்ட அந்த காரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து ஆத்தூருக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதாகவும், கார் பழுது ஆனதால் அங்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டதாகவும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வருவாய்த்துறையினர் திடீர் சோதனை
- 2 பேரிடம் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் நேற்று திடீரென சோதனை செய்தனர்.
அப்போது பெரியார் சிலை அருகே ஒரு பெட்டிக் கடையிலும், கன்னி கோவில் தெருவில் மற்றொரு பெட்டிக் கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 2 கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல்வைத்தனர்.
மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் வலங்கை மான் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, போலீஸ் சந்திரமோகன், சிறப்பு தனிப்படை போலீஸ் அறிவழகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், நடத்திய சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது.
பின், போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
- திருச்சுழி பஜாரில் 22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் திருச்சுழி பஜாரில் அதிகளவில் புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.
அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் 2 பேர் சுற்றிக்கொண்டி ருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கிய போது தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீ சார் அவர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் திருச்சுழி முத்து ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (52), கேத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 கிலோ அளவுக்கு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் அவற்றின் விற்பனை ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தனிப்படை போலீசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தோஷ், ஹரி மற்றும் அலுவலர்கள் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
அப்போது மேலராஜ வீதியில் சண்முகம் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அதைதொடர்ந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து நீடாமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரிகள் எச்சரித்தனர் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- பள்ளிகளில் அருகே கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
- விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் படி, புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் குமார், நவீன்பாலா, ராகுல், தேவகுமார், விக்னேஷ், பாலமுருகன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறியதாவது:-
புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வணிக வளாகங்கள், அலுவலகங்களில் 'புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும்.
சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, லைட்டர் ஆகியவற்றை கடைகளில் வைத்திருக்க கூடாது.
பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகையை கட்டாயமாக வணிக வளாகங்களில் வைக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது பொது சுகாதார சட்டங்களை மீறிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.
- அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
- உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காங்கயம் காவல் துறையினா் அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு 'சீல் வைத்ததுடன், ரூ.43 ஆயிரம் அபராதமும் விதித்தனா். மேலும், இதே போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
- தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
- உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.
திருப்பூர்:
தமிழக அரசால்தடை செய்ய பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பைகள் டம்ளர் கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ. 43000 அபராதம் விதித்து சீல் வைத்தனர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், காங்கயம் காவல் நிலைய போலிசார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். காங்கயம் அகஸ்திலிங்கப்பாளையம், ஆலாம்பாடி, தாராபுரம் ரோடு, கீரனூர், பூமான்டவலசு பகுதிகளிலுள்ள 10 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அப்போது
தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கடைகளுக்கும் மொத்தமாக ரூ. 43000 அபராதம் விதித்தும் கடைகளையும் மூடி சீல் வைத்தனர். மீண்டும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கடைகளுக்கு உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.
- 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- மன்னார்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவாரூர்:
மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன.
இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்