என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுக்கோட்டை ,
புதுக்கோட்டை தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் சரியாக செய்யாமல் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- மாயமான மாணவியை தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணம் மிதப்பு
- போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த பெற்றோர் மீது வழக்கு
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினர் மகள் ஹேமலதா (வயது 17). இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி 336 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஹேமலதா திடீரென மாயமானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அருகில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் ஹேமலதாவின் காலணிகள் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர்.
அப்போது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிணமாக மிதந்த மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனே அவசர அவசரமாக உடலை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அவரது பெற்றோர் எரித்து விட்டனர்.இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பெற்றோர் திட்டியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவி இறந்தது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்காமல் உடல் ஏரிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டீஸ்வரன் புத்தானத்தம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் மாணவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவி மாயமானதை தொடர்ந்து விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை
- உடலை கைப்பற்றிய காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி தாராநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 62). டெய்லரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாகராஜனின் மனைவி காணாமல் போய்விட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நாகராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடந்து கொண்டிருந்போது ஏற்பட்ட வாய் தகராறால் கணவர் வெறிச்செயல்
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
திருச்சி,
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (வயது 45). இவரது மனைவி ரேணுகாதேவி (41). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இதில் அவரது நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் ரேணுகாதேவி உறையூர் மின்னப்பன் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெபமாலைராஜ், ரேணுகா தேவியின் கழுத்தின் இடது பகுதியில் பிளோடல் கிழித்து விட்டார். இதையடுத்து லேசான காயத்துடன் ரேணுகாதேவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து ரேணுகா தேவி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெபமாலை ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- நிலுவை தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகள் வலியுறுத்தல்
- திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது
திருச்சி,
பி.எஸ்.என்.எல். எம்பிளாயீஸ் யூனியன் திருச்சி தொலைதொடர்பு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். எம்பிளாயீஸ் யூனியன் மாவட்ட தலைவர் முருகேசன், ஜான் பாஷா, சுந்தரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் சுந்தர்ராஜ், சின்னையன், முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இதில் கோபி, அன்பழகன், சண்முகம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
- திருச்சி கலெக்டரின் அதீத முயற்சி
- இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு
திருச்சி,
இயற்கையை அழித்தல் என்பது பல்வேறு இன்னல்களுக்கு நம்மையும், வருங்கால சந்ததியினரையும் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. அதிலும் நிழல் தரும் மரங்கள் அழிந்த வருவதால் மழை வளம் குறைந்துபோனதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அதனை தடுக்க இயற்கை ஆர்வலர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நாகரீகம் வளர்ந்து மேலோங்கிவிட்ட நிலையில் வீட்டை பெயர்த்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது போல், மரங்களும் ஓரிடத்தில் இருந்து தூருடன் எடுக்கப்பட்டு மற்றொரு இடத்தில் நடவு செய்யும் நிலை வந்துவிட்டது. மரங்களின் மறுநடவு முக்கியத்துவத்தை தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் பறைசாற்றி வருகிறது. அதனை அங்குள்ள மக்களும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு, நெருக்கடி போன்றவற்றை காரணமாக கூறினாலும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றம், நிலையற்ற சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் மக்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. எனவே எப்பேற்பட்ட நிலை வந்தாலும் மரங்கள் நடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவதோடு, அரசு விழாக்களில் மரக்கன்றுகளை நட்டு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.அந்த வகையில், மரங்களின் மறுநடவு முறை மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், விரிவாக்கம் செய்யும் பொருட்டும் கலெக்டர் அலுவலக வளாத்தில் அடர்ந்து, படர்ந்து வளர்ந்திருந்த வேம்பு, புளி, புங்கை மரங்கள் ஏராளமானவை அதிரடியாக வெட்டப்பட்டன. இதைப்பார்த்த இயற்கை ஆர்வலர்கள் முதலில் கண்ணீர் வடித்தனர்.அதன்பிறகே வெட்டப்பட்ட அந்த மரங்கள் மீண்டும் மறுவாழ்வு பெறப்போவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெட்டப்படும் மரங்கள் மறுநடவு மூலம் மீண்டும் அதனை பயணத்தை தொடர்வதை எண்ணி பெருமை கொண்டனர். வெட்டப்பட்ட மரங்களுக்கு உயிரூட்டுவதற்காக கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவின்பேரில் குமுளூர் வேளாண் பல்கலை பேராசிரியர் விஜய் தலைமையிலான குழுவினர் மரங்களை மறுநடவு செய்து அசத்தியுள்ளனர்.மரங்களை மறுநடவு செய்வதற்கு ஏதுவாக மரத்தின் தேவையற்ற கிளைகள் அகற்றப்பட்டன. எந்திரங்கள் உதவியுடன், வேர்களை சீர் செய்து, 6 அடி அகலத்தில், 5 அடி பள்ளம் தோண்டி மரங்களை, அருகிலுள்ள அலுவலக வளாகத்தில் நட்டனர். மேலும் வேளாண் கல்லூரி பேராசிரியர் அறிவுறுத்தல்படி, ஒரு மாத காலத்திற்கு நீர் பாய்ச்சி, தொழு உரமிட்டு பராமரித்தால் மீண்டும் மரம் நன்கு துளிர்த்து வளரும் என விளக்கம் அளிக்கப்பட்டது.மரங்களை மறுநடவு செய்வதற்கு கூடுதல் செலவினமாகும் என்பதால் பலரும் அதற்கு முன் வருவதில்லை. ஆனால் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமாரின் அதீத முயற்சியால் இன்று வெட்டப்பட்ட பல்வேறு வகையான மரங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன. இதற்காக இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கலெக்டருக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு வட்டார கல்வி அலவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
- பணி வரன் செய்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானம்
திருச்சி,
தமிழ்நாடு வட்டார கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கமலநாதன் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி (தொடக்க கல்வி) அலுவலகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுப் பணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை தொடக்க கல்வி சார்ந்த பணி விதிகளில் சேர்த்து வட்டார கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும்.வட்டார கல்வி அலுவலக அலுவலராக 2019-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் வட்டார கல்வி அலுவலராக பணி வரன்முறை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தற்கொலை முயற்சி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
- திருச்சியில் அரசு பள்ளி விரிவாக்கத்திற்காக வீடு அகற்றம்
ராம்ஜிநகர்,
திருச்சி மாவட்டம் திண்டுக்கல் சாலையில் தீரன் நகரை அடுத்து பிராட்டியூர் அமைந்துள்ளது. இப்பகுதி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்துவிட்ட நிலையில் பழனியம்மாள் இங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பழனியம்மாள் என்பவருக்கு புதிதாக வீடு கட்டித்தரப்பட்டது.இவரது வீட்டையொட்டி மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான காலி மனை ஒன்றும், அடுத்தடுத்து 3 கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகிலேயே பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதிக மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழனியம்மாளுக்கு சொந்தமான வீடு, மகாலட்சுமிக்கு சொந்தமான காலிமனை மற்றும் 3 கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது.ஆனால் பழனியம்மாள் தனது வீட்டை காலி செய்ய மறுத்துவந்தார். அதிகாரிகள் கூறியும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோர்ட்டு ஆணையுடன் ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்கள் வீட்டை இடிக்க முற்பட்டபோது, பழனியம்மாள் பொக்லைன் எந்திரத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து அதிகாரிகள் அவரையும், அவரது வக்கீலையும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதேபோல் மகாலட்சுமி என்பவரும் தனது காலிமனையை தர மறுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரிடமிருந்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே பழனியம்மாளின் வீடு இடிக்கப்பட்டது.உடனே அவரது உறவுக்கார பெண் ஒருவர் சற்று காலக்கெடு தரவேண்டும் என்றும், அதற்குள் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொள்வதாகவும் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய அனுமதி அளித்தனர். இதனால் பிராட்டியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் போலீசை கீழே தள்ளினர்
- வழக்கு பதிந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையில் ஈடுப்பட்டவர்களிடம் குடிப்போதையில் தகராறில் ஈடுபடுவது குறித்து கேட்ட போது அவரை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைகிறது
- குற்றவாளிகள் தப்பவும், நுழையவும் முடியாது
திருச்சி,
திருச்சி மாநகரை சுற்றி உள்ள சாலைகளில் மாநகர காவல்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை சாலையில் பஞ்சப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு, தஞ்சாவூர் சாலையில் காட்டூர் ஆயில் மில், சென்னை சாலையில் ஒய் ேராடு சந்திப்பு, திருவானைக்காவல் கொள்ளிடம், கரூர் சாலையில் குடமுருட்டி, வயலூர் சாலையில் ரெங்காநாகர், குழுமணி சாலையில் லிங்க நகர் என 9 செக்போஸ்ட்டுகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியின் வளர்ச்சியின் காரணமாக மாநகரத்தின் பரப்பளவும் மெல்ல அதிகரிப்பதோடு, குடியிருப்புகளும் பெருகி வருவதால், புதிய இணைப்பு சாலைகள் அமையப்பபெற்று உள்ளது. இதன் காரணமாக மேலும் சில செக் போஸ்ட்களை அமைக்க மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா முயற்சி மேற்கொண்டுள்ளார். இது குறித்த கள ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவின்படி திருச்சி மாநகரை சுற்றி மேலும் 7 சோதனைச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கே.கே.நகரில் இருந்து செல்லும் ஓலையூர் சாலையில் உடையான்பட்டி மேட்டு வாய்க்கால், எல்.ஐ.சி. காலனியில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலையில் கவிபாரதி நகர் பிரிவு சாலை, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உய்யகொண்டான் கால்வாய் ஒட்டி செல்லும் சாலையில் தொட்டிப்பாலம், மேலகல்கண்டார் கோட்டையில் காவிரி நகர், உள் அரியமங்கலத்தில் குவளக்குடி வாய்க்கால் பாலம், கல்லணை செல்லும் சாலைகளில் திருவளர்ச்சோலை மற்றும் சர்க்கார்பாளையம் சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடங்கள் என மேலும் 7 செக்போஸ்ட்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த 7 செக்போஸ்ட்டுகள் கட்டுவதற்கு அமைச்சர் கே.என்.நேருவின், தொகுதி மேம்பாட்டு நிதி கோரப்பட்டு உள்ளது.மேலும் தற்போது திண்டுக்கல் சாலை கருமண்டபத்தில் உள்ள செக்போஸ்ட் தீரன் நகர் பகுதிக்கும், குழுமணி சாலையில் உள்ள செக்போஸ்ட் அரவனூர் பகுதிக்கும், வயலூர் சாலையில் உள்ள செக்போஸ்ட் ரெட்டை வாய்க்கால் பகுதிக்கும் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.புதிதாக 7 செக்போஸ்ட்கள் அமையப்பெற்றால், திருச்சி மாநகருக்குள் வரும் அனைத்து வழிகளிலும் மொத்தம் 16 சோதனைச்சாவடிகள் அமையப்பெறும். இதனால் மாநகருக்குள் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மாநகரை விட்டு எங்கும் தப்பிக்கவும் முடியாது, மாநகருக்குள் நுழையவும் முடியாது என்கின்றனர் மாநகர காவல் துறை அதிகாரிகள்.
- குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் போலீசை கீழே தள்ளினர்
- வழக்கு பதிந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையில் ஈடுப்பட்டவர்களிடம் குடிப்போதையில் தகராறில் ஈடுபடுவது குறித்து கேட்ட போது அவரை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கண்காணிப்பு கேமிரா பழுது நீக்கும் தொழில் செய்பவர் வீட்டில் கொள்ளை
- மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மகன் கிஷோர்குமார்(வயது 32). இவர் தனது சொந்த வீட்டின் ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் யூ.பி.எஸ். உபகரணங்கள் பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான குன்னம் தாலுகா வடக்கலூரில் நேற்று முன்தினம் நடந்த கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் பெரம்பலூருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவை திறக்க முடியவில்லை. கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்து. இதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்தபடி கிடந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் தங்கச்சங்கிலி உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு போலீசார் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்