கிரிக்கெட்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடர்- இந்தியா ஏ அணியை அறிவித்தது பிசிசிஐ

Published On 2022-08-25 07:59 GMT   |   Update On 2022-08-25 07:59 GMT
  • பேட்டிங்கில் திலக் வர்மா, படிதார் ஆகியோர் உள்ளனர்.
  • ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை அறிவித்தது.

இந்திய ஏ அணிக்கு பிரியங்க் பஞ்சால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கேஎஸ் பாரத் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். சர்ஃபராஸ் கான் உள்நாட்டு சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்களும் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக், பிரிசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

முதல் போட்டி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரையிலும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 வரையிலும் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும்.

மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே செப்டம்பர் 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் மற்றும் அனைத்து போட்டிகளும் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். ஒருநாள் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும்.

நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (Wk), உபேந்திர யாதவ் (WK), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.

Tags:    

Similar News