கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு 4 சுழற்பந்து வீரர்கள் தேர்வு

Published On 2023-01-11 08:49 GMT   |   Update On 2023-01-11 08:49 GMT
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது.
  • ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடவில்லை.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் டெல்லியிலும் (பிப் 17-21) 3-வது டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 1-5), 4-வது டெஸ்ட் அகமதாபாத்திலும் (மார்ச் 9-13) நடக்கிறது.

அதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டணம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய தேர்வு குழு இந்திய தொடருக்கு 4 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்து உள்ளது. நாதன் லயன், ஆஸ்டன் ஆகர், டோட்மர்பி, மிச்சேல் சுவப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பீட்டர் ஹேன்ட்ஸ் காம்ப் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது ஆச்சரியமானதாகும். அதே நேரத்தில் 2-வது சிறப்பு விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை.

வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

கம்மின்ஸ் (கேப்டன்), வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், டிரெவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, ஹேண்டஸ்கம், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஆஸ்ட்ன ஆசுர், நாதன்லயன், மிக்சேல் சுவெப்சன், மர்பி, ஸ்டார்க், ஹாசல்வுட், ஸ்காட் போலந்து, லான்ஸ் மேரிஸ்.

Tags:    

Similar News