கிரிக்கெட்

அரை சதமடித்த கிரன் நவ்கிரே

மகளிர் பிரீமியர் லீக் - கடைசி ஓவரில் குஜராத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது உ.பி. அணி

Published On 2023-03-05 17:30 GMT   |   Update On 2023-03-05 17:30 GMT
  • முதலில் ஆடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

மும்பை:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கிரன் நவ்கிரே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் கிரேஸ் ஹாரிஸ் போராடினார். அதிரடியாக ஆடிய அவர் பந்துகளில் அரை சதம் கடந்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குஜராத் அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.

Tags:    

Similar News