ஆன்மிக களஞ்சியம்
null

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு

Published On 2024-09-26 11:30 GMT   |   Update On 2024-09-27 05:55 GMT
  • சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.
  • சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்கொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும்.

ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார்.

தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு.

வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.

பெருமாளுக்கு பால், தேன், இளநீர், சந்தனம் உள்பட 12 வகை பொருட்களை 1008 சங்காபிஷேகமாக செய்தால் நல்ல குணம் உண்டாகும்.

சங்கு தெய்வீகப் பொருளாகக் கருதப்படுவதால் அதற்கு "புனிதமான பாத்திரம்" என்றும் ஒரு பெயர் உண்டு.

எனவே தான் அதில் ஊற்றப்படும் நீர் புனிதமானதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை குடித்தால் ஆயுள் பெருகும்.

சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது.

சங்கொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். எனவே தான் பூஜை தொடங்கும் முன்பு சங்சொலி எழுப்புவது இன்னமும் நடைமுறையில் உள்ளது.

Similar News