ஆன்மிக களஞ்சியம்

ஏழு பிறவி பாவங்கள் விலக சங்காபிஷேகம் காணுங்கள்!

Published On 2024-09-26 11:46 GMT   |   Update On 2024-09-26 11:46 GMT
  • சங்கில் உள்ள ஜலதாள யோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
  • சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும்.

சோமவார சங்காபிஷேகத்தை நம்மால் நடத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை.

அந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசனம் செய்தாலே சங்கடங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சங்காபிஷேகத்தில் தீர்த்தம் தவிர மூலி கைகள், பச்சிலைகள், வாசனைத் திரவியங்கள் கலந்தும் பயன்படுத்தலாம்.

இத்தகைய சங்கு அபிஷேகங்களை கண்டால் 7 பிறவி பாவங்கள் விலகுமாம். அதோடு இழந்த பொருள், பதவி கிடைக்கும். இம்மை & மறுமை வினைகள் தீரும்.

சங்காபிஷேக தீர்த்தத்தை அருந்தியவர் களுக்கு அகாலமரணம் என்பது வராது. உடலில் தோன்றும் 4446 வகை நோய்கள் நீங்கும்.

சங்கு நிலையான தன்மை கொண்டது. சுட்டாலும் அது வெண்மையேத்தரும். பஞ்சபூதங்களால் சங்கை எந்த மாற்றமும் செய்ய இயலாது.

அது போல மனிதனும் மாறாத இயல்புடன் இறைவனை பூஜிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவழிபாட்டில் நம் முன்னோர்கள் சங்கை சேர்த்துள்ளனர்.

சங்காபிஷேகம் நடத்துபவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குறிப்பாக கணவன் & மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு.

சங்கில் உள்ள ஜலதாள யோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.

சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும்.

எனவே ஆலயத்தில் நடக்கும் சங்காபிஷேங்களில் கலந்து கொள்வது உங்களை மேன்மைப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வீட்டிலும் சங்கு வழிபாட்டை உரிய முறையில் செய்தால், இந்த பிறவியில் எல்லா இன்பத்தையும் பெற முடியும்.

Similar News