ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரக தோஷ பரிகாரம்-சுக்கிரபகவான் மற்றும் சனிபகவான்

Published On 2024-09-27 10:58 GMT   |   Update On 2024-09-27 10:58 GMT
  • பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

சுக்கிரன்

சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண் தாமரை மலர் போன்றவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்திச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் சுக்கிரக் கிரக தோஷம் நீங்கும்.

சனி

சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்து கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவைகளால் அலங்காரம் செய்து சனிபகவானின் மந்திரங்களை ஓதி வன்னிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி, அன்னம் ஆகியவைகளால் பூஜை செய்து தீபாராதனை செய்து நல்லெண்ணை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து, தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.

Similar News