ஆன்மிக களஞ்சியம்

சிறப்புமிக்க வைத்தீஸ்வரன் கோவில்

Published On 2024-09-27 10:49 GMT   |   Update On 2024-09-27 10:49 GMT
  • வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
  • அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.

அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

சூரபத்மனின் மார்பை பிளக்க முருகப் பெருமான் வேல் வாங்கிய தலம்.

காமதேனு இறைவன் மீது பாலைப்பொழிந்து அபிஷேகம் செய்த தலம்.

சித்தர்கள் இறைவனது திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகம் செய்த தலம்.

செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் அங்காரகனால் துன்பம் வரும் எனக்கருதுபவர்கள் திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய இரண்டாம் தமிழ்வேதப் பதிகத்தைப் பாராயணம் செய்து வருதல் வேண்டும்.

முடிவில் இத்தலத்திற்கு சென்று சிவலிங்கத்திருமேனியை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

இம்மூர்த்தியை வழிபட்டே அங்காரகன் தனது தோஷத்தை போக்கிக் கொண்டான்.

Similar News