ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரக தோஷ பரிகாரம்-ராகுபகவான் மற்றும் கேதுபகவான்

Published On 2024-09-27 11:00 GMT   |   Update On 2024-09-27 11:00 GMT
  • ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

ராகு

ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி நீலமந்தாரை, இலுப்பைபூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஜெபித்து, அருகம்புல்லால் யாக்தீயை எழுப்பி உளுந்து தானியம், உளுத்தம் பருப்பு பொடி, அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் ராகு கிரகதோஷம் நீங்கும்.

ராகு-திருநாகேஸ்வரம்

கும்பகோணத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

கேது

கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி தருப்பையினால் யாகத்தீயை எழுப்பி கொள்ளு தானியம், கொள்ளு பொடி, அன்னம் ஆகியவற்றைல் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேந்தியம் கொடுக்க சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் கேது கிரக தோஷம் நீங்கும்.

குறிப்பு: நவக்கிரக கீர்த்தனைகளை முத்துசாமி தீட்சரும் முத்தையா பாகவதரும் இயற்றி இருக்கிறார்கள்.

Similar News