ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரக தோஷ பரிகாரம்-சூரியபகவான் மற்றும் சந்திரபகவான்

Published On 2024-09-27 10:45 GMT   |   Update On 2024-09-27 10:45 GMT
  • கோதுமை சர்க்கரைப்பொங்கலை ஆகுதி பண்ணி தீபாராதனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

சூரியன்

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரை போன்றவற்றால் அலங்காரம் செய்து சூரிய மந்திரங்களை ஓதி வெள்ளெருக்குச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப்பொங்கலை ஆகுதி பண்ணி தீபாராதனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் சூரியக் கிரக தோஷம் நீங்கும்.

சந்திரன்

சந்திரபகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளலரி, வெள்ளல்லி போன்றவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி முருக்கஞ் சமித்தினால் யாகத் தீயை எழுப்பிப் பச்சரிசி, பாலன்னம், தயிரன்னம் போன்றவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் சந்திரக்கிரக தோஷம் நீங்கும்.

Similar News