உள்ளூர் செய்திகள் (District)

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1.16 கோடி முடக்கம்

Published On 2023-05-08 09:19 GMT   |   Update On 2023-05-08 09:19 GMT
  • சுரேஷ்ராஜன் அதிக வருமானம் பெறலாம் என நம்பி முதலீடு செய்து ஏமாந்தார்
  • கோவை சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்

கோவை,

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜன் (30), அவர் பகுதி நேர வேலை தொடர்பாக தனக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் கொடுத்த வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்த நபர் செயலியில் அனுப்பிய இணைப்புக்குள் சென்று சிறிய பணிகளைச் செய்து கொடுத்து அதன் மூலம் சிறு தொகைகளைப் பெற்றுள்ளார்.

இதனால், அதிக வருமானம் பெறலாம் என நம்பி மேலும் 13 பணப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 41 கூடுதலாக முதலீடு செய்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவரது வங்கிக் கணக்குக்கு எந்தத் தொகையும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்ராஜன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து இதில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.16 கோடியே 15 லட்சத்து 93,033-ஐ முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு ள்ள செய்தி க்குறி ப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் அறிமுகம் இல்லாத நபர்கள் கூறும் அறிவுரைகளை நம்ப வேண்டாம் என்றும், இணையதளம் மூலமாக பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News