செய்திகள்

பொள்ளாச்சியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் சாலை மறியல்

Published On 2018-10-15 12:27 GMT   |   Update On 2018-10-15 12:27 GMT
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம், காந்திநகர், ரங்கசமுத்திரம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வால்பாறை சாலை வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் வஞ்சியாபுரம் பிரிவு பி.ஏ.பி. கால்வாய் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் கடையை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனால் தொடர்ந்து டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்ததால் ஆத்திரமடைந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால் வால்பாறை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி யளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News