உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த பெண் சிறுத்தை

Published On 2023-04-16 08:45 GMT   |   Update On 2023-04-16 08:45 GMT
  • தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர்.
  • சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

ஊட்டி,

கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.

இவரது தோட்டத்தில் குடிநீர் தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் தினமும் தண்ணீர் எடுத்து அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத் தன்றும் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர்.

அப்போது கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது, சிறுத்தை ஒன்று உள்ளே இறந்த நிலையில் கிடந்தது.

சிறுத்தை கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து கிணற்றுக்குள் கிடந்தது பெண் சிறுத்தை என்பதும், வனத்தை விட்டு வெளியே றிய சிறுத்தை தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தே கிக்கின்றனர்.

மேலும் கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீ ரில் தத்தளித்தவாறு திரிந்த சிறுத்தை சிறிது நேரத்தில், மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கிணற் றுக்குள் விழுந்து இறந்த சிறுத்தையை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் அங்கி ருந்து சென்றனர்.

நேற்று காலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண் சிறுத்தை யின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பா கங்களை சேகரித்து விட்டு சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை தேடி வந்த போது கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.

Tags:    

Similar News