உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயத்தை தடுக்கக் கோரி ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-30 09:04 GMT   |   Update On 2023-05-30 09:04 GMT
  • ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார்.
  • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஊட்டி,

தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறுகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது இல்லை. சுற்றுலாபயணிகள் அதிகமாக வரும் நீலகிரியில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் கடும் அவதிப்படுகின்றனர்.

நீலகிரியில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிக அளவில் உள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ச்சுணன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்சீலன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் பாசறை மாவட்ட செயலாளரும், மாவட்ட துணை செயலாளர் கோபாகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு மற்றும் நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News