உள்ளூர் செய்திகள் (District)

செய்துங்கநல்லூர் சிவன்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

Published On 2023-11-10 08:40 GMT   |   Update On 2023-11-10 08:40 GMT
  • பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது.
  • மாலை 6 மணிக்கு சிவன் சக்திக்கு சீர்வரிசை தட்டுடன் திருக்கல்யாணம் ஏற்பாடு நடந்தது.

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக நெல்லையப்பர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலைகளை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தினமும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருக்கல்யாணத்தினை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர், சிவகாமியம்மாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிவன் சக்திக்கு சீர்வரிசை தட்டுடன் திருக்கல்யாணம் ஏற்பாடு நடந்தது. உற்சவர் சிவன் சக்திக்கு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. அதன் பின் சிறப்பு தீபாராதனை காட்டப்படடு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் ஆய்வர் நம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் மற்றும் ஆனமிக பேரரவை செய்திருந்தனர்.

Tags:    

Similar News