உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு

Published On 2022-08-17 09:27 GMT   |   Update On 2022-08-17 09:27 GMT
  • உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும்
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அரியலூர்:

கடலூர் மாவட்டம் திட்டகுடி அருகேயுள்ள திருவட்ட துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன் செல்வம் (வயது 41) இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த செல்வம் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து செல்வத்தின் குடுத்தினர் மற்றும் கிராம மக்கள் இழப்பீடு கேட்டு தனியார் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டனர். அப்போது உரிய இழப்பீடு தரப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து தளவாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News