தனியார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. சார்பில் 3 நாள் சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்
- பாலகிருஷ்ணன் அதியமான் பேசும்போது, உயர் செயல்திறன் கணினிகளின் பங்கு அங்கு குறித்து விளக்கினார்.
- நிகழ்ச்சியில் டாக்டர் எஸ். கோட்டீஸ்வரன், டாக்டர் வி. சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி மற்றும் ஐஇஇஇ, இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் 2024 சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. பொருளாளர் மற்றும் தாளாளர் எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். முதல்வர் எஸ். ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடக்க விழாவில் ஆவடி டிஆர்டிஓ இயக்குனரரும், விஞ்ஞானியுமான ஜே.ராஜேஷ் குமார் மற்றும் ஐஐடி மதராஸ் துறைத் தலைவர் டாக்டர் பலராமன் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் டாக்டர் சத்யநாராயணன் சேஷாத்ரி ஆகியோரும் பயன்பாட்டு இயந்திரவியல் மற்றும் உயிரியல்துறை, எரிசக்தி கூட்டணி மற்றும் நிலைத்த வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.
எஸ்.ஏ.கல்லூரியின் பொருளாளர் மற்றும் தாளாளர் எஸ். அமர்நாத் பேசும்போது, இந்திய உற்பத்தித் துறைகளில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) தொடர்பான அரசு நடவடிக்கைகள் மற்றும் இந்திய எஸ்டிஜி அடைவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி சிறப்புரையாற்றினார்.
நிறைவு விழாவில், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி பேராசியர் எம் நளினி விழாவின் சிறப்பம்சங்களை சுருக்கமாகப் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினரான இந்திய புவியியல் அமைச்சகத்தின் பாலகிருஷ்ணன் அதியமான் பேசும்போது, உயர் செயல்திறன் கணினிகளின் பங்கு அங்கு குறித்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஐஐடி மெட்ராஸ் மின்சார பொறியியல் துறைத் தலைவர் ஆர்.டேவிட், அனைவருக்கும் சமமான செலவில் தொழில்நுட்பமும் கல்வியும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு எஸ்.ஏ. கல்லூரி தாளாளர் எஸ்.அமர்நாத், மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ். கோட்டீஸ்வரன், டாக்டர் வி. சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.