உள்ளூர் செய்திகள் (District)

அரியலூரில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-02-13 09:20 GMT   |   Update On 2023-02-13 09:20 GMT
  • அரியலூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
  • முகாமில் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

அரியலூர்:

அகில இந்திய ஆயர்வேத கூட்டமைப்பின் திருச்சி மண்டலம், ஆரோக்கிய ஆயர்வேதிக் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச ஆயர்வேத மருத்துவ முகாம் அரியலூரில் நடைபெற்றது சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ரோட்டரி சங்கச் செயலர் கொளஞ்சி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தொழிலதிபர்கள் கோவை கிருஷ்ணா, அமுதன், ஏபிஎன் சுதாகர், புலவர் இளங்கோவன், மீரா மகளிர் கல்லூரி தாளாளர் கமலாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுர்வேத மருத்துவ நிபுணர் இரா.ரேவதி தலைமையில் கார்த்திக், சிவகுரு, ஆகாஷ்,சந்தோஷ்ராஜ் ஆகியோர் கொண்டமருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, சிகிச்சை அளித்தனர். முகாமில், மூட்டுவலி, வீக்கம், மூட்டு தேய்மானம், கழுத்து, இடுப்பு மற்றும் தண்டுவட பிரச்னைகள், நாள்பட்ட சளி, இளைப்பு, சைனசைடிஸ் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக ரோட்டரி சங்க நிர்வாகி பிரபு சங்கர் வரவேற்றார். முடிவில், ஆரோக்கிய ஆயுர்வேதிக் மருத்துவமனை நிர்வாகி கௌஷிக் நன்றி தெரிவித்தார்.


Tags:    

Similar News