உள்ளூர் செய்திகள் (District)

ஜெயங்கொண்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-01-29 06:40 GMT   |   Update On 2023-01-29 06:40 GMT
  • ஜெயங்கொண்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை திருமாவளவன் தொடங்கி வைத்தார்
  • முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் மாடர்ன் கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 143 தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் 11 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் நகர்மன்றதலைவர் சுமதி சிவக்குமார், மாடர்ன் கல்விக்குழுமத்தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் திருச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான பயிற்சி மைய உதவி இயக்குநர் கலைச்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் நகராட்சி முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


Tags:    

Similar News