உள்ளூர் செய்திகள்

வாட்டாக்குடியில் வயலாய்வு முகாம் நடைபெற்றது.

தென்னை விவசாயிகளுக்கு வயலாய்வு முகாம்

Published On 2023-04-29 09:43 GMT   |   Update On 2023-04-29 09:43 GMT
  • தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு முகாம்.
  • விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நேரடியாகவும், வயல்வெளியில் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அடுத்த வாட்டா குடி, களிச்சா ன்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்துறை ஆகியவை இணைந்து தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிக ளுடன் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், கருத்து காட்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

தொடர்ந்து, விவசா யிகளின் சந்தேகங்களுக்கு நேரடியா கவும், வயல்வெ ளியில் செயல்வி ளக்கமா கவும் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி விஞ்ஞானி மதியழகன் எடுத்து கூறினார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தென்னை விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தென்னை நுண்ணூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு, அய்யா மணி ஆகியோர் கருத்துக்காட்சியை விவசாயிகளுக்கு விளக்கினர்.

தென்னையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்கான டிவிரிடி பயன்படுத்துவது பற்றி வேளாண் விஞ்ஞானியுடன் இணைந்து வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு பூமிநாதன் மற்றும் சுரேஷ் செயல்விளக்கம் அளித்தனர்.

இதேபோல், களிச்சான்கோ ட்டை கிராமத்தில் ஊராட்சி தலைவர் வேம்பரசி தமிழரசன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் தென்னை மரத்தின் அடிப்பகுதியில் காண்டா மிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்வண்டின் இளம்பு ழுக்கள் எவ்வாறு பராமரிக்காத தென்னை மரத்தை பாதித்துள்ளன என வேளாண் விஞ்ஞானி செயல்விளக்கம் அளித்தார்.

மேலும், அவற்றை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும், தென்னை டானிக் பயன்படுத்துவதன் மூலம் தென்னந்தோப்புகளில் எவ்வாறு மகசூல் அதிகரிக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கினார்.

வயலாய்வுக்கான ஏற்பாடுகளை பெரியகோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் செய்திருந்தார். முடிவில் களிச்சான்கோட்டை முன்னோடி விவசாயி ஐயப்பன் இந்த வயலாய்வு முகாம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக கூறினார்.

முகாமில் முன்னோடி தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News