உள்ளூர் செய்திகள் (District)

மாடுகளை வதை செய்த 4 டிரைவர்களுக்கு அபராதம்

Published On 2022-08-15 09:01 GMT   |   Update On 2022-08-15 09:01 GMT
  • சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
  • அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தியதால், இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தல் செய்து 4 வாகனங்களில் மாடுகள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது. பின்னர் 4 பேரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதில் சேலத்தை சேர்ந்த குமாருக்கு ரூ.2,200, பொள்ளாச்சி சுரேஷ்-க்கு ரூ.3000, தாராபுரம் தண்டபாணிக்கு ரூ.3000, ஒட்டன்சத்திரம் செல்லதுறைக்கு ரூ.2,800 என அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News