உள்ளூர் செய்திகள்

பேரணியை மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவிலில் இன்று மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-12-14 09:58 GMT   |   Update On 2022-12-14 09:58 GMT
  • பிளாஸ்டிக்கை ஒழிக்க, குப்பை இல்லா குமரியை உருவாக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்திச் சென்றனர்
  • நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பார்வதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று பார்வதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

பேரணியை மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ராஜ லட்சுமி நகர், பெருவிளை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது . பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், குப்பை இல்லா குமரியை உருவாக்குவோம் என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

பேரணியில் மாநகர் நகர அலுவலர் ராம் மோகன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை கவுன்சிலர் கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News